TNEA: சான்றிதழ்களை பதிவேற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!!

பொறியியல் சேர்க்கை செயல்பாட்டின் ஒரு பகுதியாக அசல் சான்றிதழ்களைப் பதிவேற்ற முயற்சிக்கும் போது பல மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் (DoTE) இதற்கான காலக்கெடுவை நான்கு நாட்கள் நீட்டித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2020, 11:24 AM IST
  • அசல் அட்டவணையின்படி, தேவையான ஆவணங்களை பதிவேற்றுவதற்கான கடைசி நாள் திங்கட்கிழமையாக இருந்தது.
  • பல மாணவர்கள் தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தி ஆவணங்களை ஸ்கேன் செய்தனர்.
  • மாணவர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, சான்றிதழ்களைப் பதிவேற்ற இன்னும் நான்கு நாட்கள் வழங்கப்பட்டுள்ளன.
TNEA: சான்றிதழ்களை பதிவேற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!! title=

சென்னை: பொறியியல் சேர்க்கை (Engineering Admission) செயல்பாட்டின் ஒரு பகுதியாக அசல் சான்றிதழ்களைப் பதிவேற்ற முயற்சிக்கும் போது பல மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் (DoTE) இதற்கான காலக்கெடுவை நான்கு நாட்கள் நீட்டித்துள்ளது. அசல் அட்டவணையின்படி, தேவையான ஆவணங்களை பதிவேற்றுவதற்கான கடைசி நாள் திங்கட்கிழமையாக இருந்தது.

10 மற்றும் 12 வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ்கள், இடமாற்றச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றுமாறு DoTE மாணவர்களைக் கேட்டுக்கொண்டது. சான்றிதழ்கள் image-ஆக அல்லது PDF ஆக பதிவேற்றப்படலாம். கோப்பு அளவு (File size) 150kb முதல் 1 mb வரை இருக்கலாம். அதே நேரத்தில் புகைப்படம் மற்றும் கையொப்பம் 20kb முதல் 50kb அளவு வரை மட்டுமே பதிவேற்றப்பட வேண்டும்.

பல மாணவர்கள் தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தி ஆவணங்களை ஸ்கேன் செய்தனர். ஆனால் கோப்புகள் குறிப்பிட்ட அளவை விட அதிக அளவைக் கொண்டதாக இருந்தன.

“நான் மொபைல் போனைப் பயன்படுத்தி எனது சான்றிதழ்களை ஸ்கேன் செய்தேன். ஆனால் கோப்பு அளவுகள் 1 எம்பிக்கு மேல் இருந்தன. இதனால், என்னால் எனது ஆவணங்களை பதிவேற்ற முடியவில்லை” என்று கணினி பொறியியல் படிப்பில் சேர விரும்பும் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கூறினார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் சேர ஆர்வம் கொண்டுள்ள மற்றொரு மாணவர், வீட்டில் உள்ள கணினியைப் பயன்படுத்தி இதைச் செய்ய முயற்சித்ததாகக் கூறினார். "ஆனால் கோப்பு அளவை எவ்வாறு அதிகரிப்பது அல்லது குறைப்பது என்று எனக்குத் தெரியாது." என்றார் அவர்.

இவர்களைப் போல இன்னும் பலர், கணினி மையங்களை அணுகி படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், இது எளிதானது விஷயமாக இல்லை. ஏனெனில் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்துவதற்கான தடை காரணமாக இதுபோன்ற பல கடைகள் மூடப்பட்டுள்ளன. பல மாணவர்கள் இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டனர்.

ALSO READ: ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் நிரந்தரமாக செல்லும் என அறிவியுங்கள்: PMK

இது குறித்து ​​ஒரு மூத்த அதிகாரியிடம் கேட்டபோது, மாணவர்கள் அறிவுறுத்தல்களை சரியாகப் படிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அவரைப் பொறுத்தவரை, மாணவர்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை பதிவேற்ற 20 நாட்களுக்கு மேல் அவகாசம் வழங்கப்பட்டது. "இருப்பினும், மாணவர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, அவர்களின் சான்றிதழ்களைப் பதிவேற்ற நான்கு நாட்கள் நீட்டிப்பு வழங்கியுள்ளோம்," என்று அவர் கூறினார்.

கொரோனா தொற்றால் ஏற்கனவே மாணவர்களும் பெற்றோர்களும் பல குழப்பங்களை சந்தித்து வரும் வேளையில், ஆன்லைன் பதிவேற்றம் போன்ற விஷயங்களில் தேவையான வசதியை செய்து கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். குறிப்பிட்ட நேரத்திற்குள் படிவங்களை சமர்ப்பிக்காவிட்டால், மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கும் அழுத்தத்துக்கும் ஆளாக நேரிடும் என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்வது நல்லது. 

ALSO READ: Corona Impact: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் மாணவர்கள்!!

Trending News