தமிழகத்தில் ரூ.90,000 கோடி முதலீடு - நிதின் கட்கரி

Last Updated : Jun 4, 2016, 10:59 AM IST
தமிழகத்தில் ரூ.90,000 கோடி முதலீடு - நிதின் கட்கரி title=

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கடல் சார்ந்த திட்டங்களுக்காக ரூ.90,000 கோடி முதலீடு செய்யப்படும் என  தெரிவித்தார்.

காணொளியில் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது நிதின் கட்கரி இதைத் தெரிவித்தார்.

திருப்பூர் மற்றும் குளச்சல் துறைமுகம் நெடுஞ்சாலைக்கு ரூ.13,000 கோடியும்,  கூடலூர் துறைமுகத்தை ஒட்டியுள்ள சாலை வசதிகளுக்கு ரூ.100 கோடியும், பெங்களூர் வைட் பீல்ட் துறைமுகம் நெடுஞ்சாலை வசதிக்கு ரூ.20,000 கோடி என மொத்தம் ரூ.90,000 கோடி தமிழகத்தில் முதலீடு செய்யப்படும் என தெரிவித்ததார். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வருவாய் அதிகரிக்கும் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திட்டத்துக்கு மக்களின் ஆதரவு மிகவும் அவசியம் மேலும் மத்திய அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Trending News