போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை ரத்து!!

சென்னைáயில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை  ரத்து செய்யத்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Last Updated : Dec 22, 2019, 12:10 PM IST
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை ரத்து!! title=

சென்னைáயில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை  ரத்து செய்யத்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து  வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் இதுவரை இந்தச் சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் கண்டுள்ளன. முன்னதாக இந்த சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் காவல்துறையினருடன் மோதல் நடத்தியதில், இரு தரப்பு மக்களும் காயமடைந்ததை அடுத்து டெல்லியில் நடந்த போராட்டம் கசப்பாக மாறியது. ஜாமியா மற்றும் சீலாம்பூர்-ஜாஃபராபாத் வன்முறைகள் மற்றும் ஜாமா மஸ்ஜித் அருகே நடந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக  வணிகர்கள் டெல்லிக்கு வருவதை நிறுத்திவிட்டனர். 

இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், இடதுசாரி மாணவ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 23-ம் தேதி திமுக  மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து சென்னையில் பேரணி நடத்த முடிவானது.

இந்நிலையில், சென்னையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை விடுமுறை எடுக்க போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுகிறது.  அதனால் அவர்கள் வழக்கம்போல் நாளை கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Trending News