உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெட்ரோல் விநியோகம் நிறுத்தம்!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் 8.15 வரை பெட்ரோல் விநியோகம் நிறுத்தம்!

Last Updated : Feb 16, 2019, 04:23 PM IST
உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெட்ரோல் விநியோகம் நிறுத்தம்!  title=

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் 8.15 வரை பெட்ரோல் விநியோகம் நிறுத்தம்!

நேற்று முன் தினம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் 8.15 வரை பெட்ரோல் விநியோகம் நிறுத்துவதாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து அவர்கள் கூறுகையில், இதன் ஒருபகுதியாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இன்று இரவு 8 மணி முதல் 8.15 வரை 15 நிமிடங்கள் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். மேலும், 15 நிமிடங்கள் பெட்ரோல் நிலையங்களில் விளக்குகள் அணைக்கப்படும் எனவும், பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

 

Trending News