அமமுக ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் திமுக-வில் இணைந்தார்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.ம.மு.க பிரமுகர்கள் திமுகவில் இணைந்தனர்!

Last Updated : Feb 15, 2019, 01:23 PM IST
அமமுக ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் திமுக-வில் இணைந்தார்! title=

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.ம.மு.க பிரமுகர்கள் திமுகவில் இணைந்தனர்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மதுரையில் இன்று (15-2-2019) காலை, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பருவாச்சி எஸ்.பரணீதரன் திமுக-வில் இணைந்தார்.

அவருடன் அ.ம.மு.க. கட்சியின் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் ஈரோடு எம்.பிரபு-வும் திமுக-வில் இணைந்தார்.

இதனையடுத்து இவர்களது முன்னிலையில் அ.ம.மு.க. கட்சியின் பவானி நகரத்தைச் சேர்ந்த நகரச் செயலாளர் வாணி கே.குமரன்,  - நகர இணைச் செயலாளர் எம்.பாக்கியராஜ் - நகர இளைஞர் அணிச் செயலாளர் எம்.அருண்குமார் - நகர எம்.ஜி.ஆர். பேரவைச் செயலாளர் பி.பாலமுருகன்; 

ஈரோடு மாநகர் மாவட்ட அணிகளைச் சேர்ந்த  மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் எம். சிவகுமார் - மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எஸ். செல்வக்குமார் - மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆர்.கார்த்திக்  - மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர்  ஜே.சந்தோஷ் டோமினிக் - மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் என்.ராமச்சந்திரன் - மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைத் தலைவர்  என்.தனசேகர் - மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர் ஈ.அரவிந்முருகன் - மாவட்ட மாணவர் அணி தலைவர்  எம்.டென்சன் - மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர்  எம்.முத்துகிருஷ்ணன் -  மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர்கள் அருண்குமார், சசிகுமார் - மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர் கே.ரமேஷ் - மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர்   கோட்டை கார்த்தி - மாவட்ட பேரவைத் தலைவர் அழகேசன் - மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் மில்டன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்நிகழ்வின் போது கழக துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., கரூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

Trending News