பதறவைத்த இரட்டைக்கொலை, பதிலாய் வந்த என்கவுண்டர்: செங்கல்பட்டில் பரபரப்பு

காவல் நிலையம் அருகே மக்கள் நடமாடும் பகுதியில் நடந்த இந்த இரட்டை கொலை சம்பவமும் அதைத் தொடர்ந்து நடந்த என்கவுண்டரும் மக்களிடம் பீதியைக் கிளப்பியுள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 7, 2022, 11:50 AM IST
பதறவைத்த இரட்டைக்கொலை, பதிலாய் வந்த என்கவுண்டர்: செங்கல்பட்டில் பரபரப்பு title=

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற இரட்டை கொலையில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். 

மொய்தீன், தினேஷ் ஆகியோரை பிடிக்க முயன்றபோது, அவர்கள் காவல்துறையினரை (TN Police) தாக்க முயன்றதால் தற்காப்புக்காக சுட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க ’என்கவுன்டர்’ வெள்ளத்துரைக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில், இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் வழக்கு ஒன்றில் கையெழுத்திட்டு விட்டு,  எதிரில் செங்கல்பட்டு  கே.தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் என்பவர் டீக்கடைக்கு  டீ குடிக்க வந்துள்ளார். அப்போது  ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்து கார்த்திக் மீது நாட்டு  வெடிகுண்டு வீசியும் கத்தியால் சரமாரியாக வெட்டியும் உரு தெரியாமல் தலையை சிதைத்துவிட்டு தப்பியோடி விட்டனர் .

சம்பவ இடத்திலேயே அப்பு கார்த்தி துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தப்பியோடிய மர்ம கும்பல் செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியில் வசித்து வரும்  சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ் ( 22) என்பவரை, அவர் டிவி பார்த்து கொண்டிருந்த போதே, சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

murder

ALSO READ | கோவையில் துயர சம்பவம்; தாயும் மகளும் தற்கொலை

இருவரது உடலையும் மீட்ட செங்கல்பட்டு நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து  தப்பியோடிய கும்பல் யார், கொலைக்கான (Murder) காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

ஒரே சமயத்தில் இரட்டை கொலை நடந்த சம்பவத்தால் செங்கல்பட்டு நகரமே பரபரப்பாக காணப்பட்டது. காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்பு கார்த்தி மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் பங்காளி வழியில் அண்ணன் தம்பிகள் என தெரியவந்தது. அப்பு கார்த்தி மீது ஏற்கனவே மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கிற்காக காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பும்போது அவரை வெட்டி சாய்த்து இருந்ததால், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் அந்த கோணத்தில் விசாரணை நடத்தினர். 

அதன் பிறகு, கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பல் குறித்து காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் பயன்படுத்திய நாட்டு வெடிகுண்டுகளை வல்லுநர்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி, விசாரணை மேற்கொண்டார். தப்பியோடிய மூன்று நபர்களையும் காவல்துறை தனிப்படை அமைத்து தேடினர். 

முக்கிய குற்றவாளி உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தை  சேர்ந்த மதன் என்கிற மாதவன் என்பதும் தெரிய வந்தது. 

காவல் நிலையம் (Police Station) அருகே மக்கள் நடமாடும் பகுதியில் நடந்த இந்த இரட்டை கொலை சம்பவமும் அதைத் தொடர்ந்து நடந்த என்கவுண்டரும் மக்களிடம் பீதியைக் கிளப்பியுள்ளது. 

செங்கல்பட்டு நகர் பகுதியில் மூன்று வருடங்களுக்கு பிறகு ரவுடிகள் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கி உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ALSO READ | நீதிபதி வீட்டிற்கு சென்ற கொள்ளையன் - காத்திருந்த அதிர்ச்சி..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News