குடிப்பழக்கத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடிய முன்னாள் மதுப் பிரியரின் செயல், கலகலப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
21 வயதான பெண், தன்னை 4 பேர் இணைந்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Chengalpattu: '60 கிலோமீட்டர்க்கு இடையில் இருக்கும் சுங்கச் சாவடிகளை ஏற்க மாட்டோம் என்றும், இது மிக பெரிய விதி மீறல்': லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் யுவராஜ்
நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார் என்றும் தமிழ்நாட்டை ஆட்சி செய்வது அவரின் மகனும், மருமகனும், மனைவியும்தான் என செங்கல்பட்டில் நடைபெற்ற போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றஞ்சாற்றியுள்ளார்.
தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்னால் சேர் ஆட்டோ மோதியதில்,படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இரண்டு குழந்தைகளும் இறந்த சூழ்நிலையில் தற்போது தேன்மொழி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுயநினைவிழந்து ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
CRIME : செங்கல்பட்டு மாவட்டம் பொன் விளைந்த களத்தூர் அருகே, மது போதையில் மாமியாரைத் தாக்கி, மாமனாரை கொன்ற, மருமகனின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.