இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அதிமுகவின் இரு அணிகளுக்கும் தேர்தல் ஆணையம் 8 வாரம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க., சசிகலா தலைமையில் ஒரு அணி யாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவுபட்டது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கேட்டதால், அது முடக்கப்பட்டது.
இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இரு அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று கொண்டு ஜூன் 16 வரை 8 வாரம் கூடுதல் அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.