’ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்ல’ அமைச்சர் உதயநிதி விளாசல்

ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற பிரச்சனைகளை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 11, 2023, 01:46 PM IST
  • ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்துள்ளார்
  • சிஏஜி அறிக்கையை பற்றி பேசுங்கள்
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்
’ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்ல’ அமைச்சர் உதயநிதி விளாசல் title=

பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு சென்னை செல்வதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரே நாடு, ஒரே தேர்தலை கலைஞர் ஆதரித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " கலைஞர் எப்போது ஆதரித்தார். எடப்பாடி பழனிச்சாமி முதலில் எதிர்த்தார். அதற்கு என்ன சொல்வது?. பேட்டி கூட கொடுக்காமல் வெறும் கடிதம் மூலமாக எதிர்ப்பை தெரிவித்தார். 

மேலும் படிக்க | கொடைக்கானலை தொடர்ந்து ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து என்ன சாதிக்கப் போகிறார்கள். சமீபத்தில் தான் கர்நாடகாவில் தேர்தல் முடிந்தது. ஆட்சிகள் கவிழாதா?. இது போன்ற நிறைய கேள்விகள் உள்ளது. ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஒவ்வொரு நாளைக்கு, ஒவ்வொரு பிரச்சனையை கிளப்பி விடுகிறார்கள். சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியது சரி என்றால் பாரத பெயர் மாற்றம் சரி என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்போது, இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்று மோடி சொன்னார். அது போல மாற்றிவிட்டார் வாழ்த்துக்கள். 

சனாதனம் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும்போது, கொள்கைக்காக உருவாக்கப்பட்டது தான் திமுக. ஆட்சி அதற்கு அடுத்தது தான். அதைவிட முக்கியம் சமூக நீதி. எனவே அது தொடர்பாக தொடர்ந்து பேசுவேன். அண்ணா, பெரியார் யாரும் பேசாததை நான் பேசவில்லை. அதைவிட முக்கியம் 2024 தேர்தலில் பாசிச பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஏழரை லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது. மணிப்பூரில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. சர்ச்சுகள் இடிக்கப்பட்டுள்ளது. முதலில் அதைப் பற்றி பேசுவோம். அதன் பிறகு சனாதனத்தை பற்றி பேசுவோம். சனாதனத்தை பற்றி தற்போது நான் பேசவில்லை, சனாதன ஒழிப்பு மாநாட்டில் தான் நான் பேசினேன்." என தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஏ.ஆர் ரஹ்மான் கச்சேரியை கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள் - ரூ. 10 ஆயிரம் கொடுத்தும் சுத்த வேஸ்ட்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News