சசிகலாவின் சொத்துக்களை முடக்கிய வருமான வரித்துறை.. விடுதலை தள்ளிப்போகுமா..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவர் விடுதலையாகும் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2020, 10:29 PM IST
  • சசிகலாவிற்கு இன்னும் கட்சிக்குள் பெரும் ஆதரவு இருப்பதாகவும், அவர் விடுதலையானால் அரசியல் களம் மாறும் என்றும் கூறப்படுகிறது.
  • முடக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் 2003 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஹரிசந்தனி எஸ்டேட் என்ற பெயரில் வாங்கப்பட்டது என கூறப்படுகிறது.
சசிகலாவின் சொத்துக்களை முடக்கிய வருமான வரித்துறை.. விடுதலை தள்ளிப்போகுமா..!! title=

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவர் விடுதலையாகும் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார். 

தேர்தலுக்குமுன் அவர் நிச்சயம் விடுதலையாகி வடுவார் என்ற நிலையில் அவரது விடுதலை மூலம் தமிழக அரசியல் களத்தில் என்ன விதமான மாற்றங்கள் இருக்கும் என்பட்து தொடர்பான பல ஊகங்கள் கிளம்பியுள்ளன. 

சசிகலா தனக்கு தண்டனை கிடைத்தவுடன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் நாற்காலியில் அமர்த்தினார். ஆனால், பின்னர் எடப்பாடி பழனிச்சாமியும், தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து விட்டனர். அதனால் சசிகலா ஓரம்கட்டப்பட்டார்.

 எனினும் சசிகலாவிற்கு இன்னும் கட்சிக்குள் பெரும் ஆதரவு இருப்பதாகவும், அவர் விடுதலையானால் அரசியல் களம் மாறும் என்றும் கூறப்படுகிறது.

அவர் ஒரு அரசியல் சக்தியாக மாறாமல் இருக்க தேர்தல் வரை அவர் விடுதலையை தள்ளிப் போட சில காய்நகர்த்தல்கள் செய்யப்படுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், தான் வருமான வரி துறை, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்தோழியான சசிகலாவின் சுமார் 300 கோடி மதிப்பிலான 65 சொத்துக்களை முடக்கியுள்ளது.

இந்த சொத்துக்களில், ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் வேதா நிலையத்திற்கு எதிரே கட்டிக்கொண்டிருக்கும் புதிய கட்டிடமும் அடங்கும்.

தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடத்தில் உள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த சொத்துக்கள் அனைத்தும் 2003 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஹரிசந்தனி எஸ்டேட் என்ற பெயரில் வாங்கப்பட்டது என கூறப்படுகிறது.

இதனால் சசிகலாவின் சொத்து முடக்கம் பல கேள்விகளை எழுப்புகிறது. 

ALSO READ | இன்றைய நிலவரம்: 5,956 பேருக்கு COVID-19; மரணம் 91; இதுவரை மூன்றை லட்சம் பேர் குணம்

Trending News