குஜராத், உ.பி.யை விட தமிழகத்தில் வேலையின்மை அதிகம் உள்ளது - அண்ணாமலை!

ஒரு எம்.பி தொகுதிக்கு இரண்டு நவோதயா பள்ளிகள் துவக்க தமிழக அரசு அனுமதி அளிக்காமல் உள்ளது. நவோதயா என்ற பெயர்தான் பிரச்னை என்றால் கமாராஜர் பள்ளி என பெயர் வைத்து விடலாம் - அண்ணாமலை.

Written by - RK Spark | Last Updated : Jul 21, 2024, 10:02 AM IST
  • தமிழகத்தில் வேலையின்மை அதிகம் உள்ளது.
  • குஜராத், உபியை விட அதிகளவில் இருக்கிறது.
  • சென்னையில் அண்ணாமலை பேச்சு.
குஜராத், உ.பி.யை விட தமிழகத்தில் வேலையின்மை அதிகம் உள்ளது - அண்ணாமலை! title=

தமிழ்நாடு நாடார் சங்கத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர், நேசமணி, ம.பொ.சிவஞானம் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதில் பேசியபோது, இந்த விழா தமிழகத்தில் முன்பு தலைவர்கள் எப்படி வழிநடத்தினார்கள் என்பதை நியாபகப்படுத்துவதற்கானது. காமராஜரை போன்ற தலைவர் மீண்டும் பிறக்க வாய்ப்பே இல்லை. அவரின் கொள்கைகளை வேண்டுமானால் பின் பற்றலாம். காமராஜர் தனது வாழ்நாளில் தேசத்திற்காக 3000 நாட்கள் சிறை சென்றுள்ளார். சில மிசாவில் சென்றதற்கான குறிப்பு இல்லாவிட்டாலும் மிசாவில் சென்றதாக கூறுவர். தனக்கு கிடைத்த பொறுப்புகளை வேண்டாம் என பலமுறை மறுத்தவர் பெருந்தலைவர் என புகழாரம் சூட்டினார்.

மேலும் படிக்க | நடிகர் விஜய்யின் கட்சி கொடி அடுத்த வாரம் அறிமுகம்

மேலும் ஒன்பது ஆண்டுகள் பொற்கால ஆட்சியை கொடுத்தவர் அவர். பாரதத்திற்கு இரண்டு முறை பிரதமரை தேர்வு செய்வதர் காமராஜர். பதவியில் இருந்து கட்சிப் பணிக்கு சென்ற முதல்நபரும் அவர், அவரின் வாழ்க்கையில் ஒன்றொண்டும் பாடம்தான். இந்த நிகழ்ச்சியில் அரசியல் போசக்கூடாது என எழுதி வாங்கி போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஆனால் இப்போது நடக்கும் பொய்யான ஆட்சியை காமராஜர் ஆட்சி என சொல்கின்றனர். கடந்த 1969ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் நாடர்களில் இருவகை ஒன்று கிறிஸ்தவ நாடார், மற்றொன்று ஹிந்து நாடார் எனக்கூறி அந்த சமூகத்தில் முதல் முதலில் பிளவை ஏற்படுத்தியவர் கருணாநிதிதான்.

காமராஜர் முதல்வராக இருந்தபோது ஒன்பது அணைகள் கட்டினார். அது இன்றும் நிலைத்து நிற்கிறது. ஆனால் தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவர் கட்டிய ஒரே ஒரு அணையான குடகனாறு அணை இடிந்து விழுந்தது. ம.பொ.சிவஞானம் தி.மு.க.வில் இல்லாததால் அவருக்கு மரியாதை செலுத்தமாட்டார்கள் என சரமாரி திமுகவை விமர்சனம் செய்தார். நாடார் சமூக உழைப்பின் இலக்கணம் தமிழகத்தில் “ஆன்லைன்” வர்த்தகத்திற்கு பாஜக எதிர்ப்பு தொடர்ந்து தெரிவிக்கும். தமிழகத்தில் கல்வி, மருத்துவம் அனைவருக்கும் சமமாக கிடைப்பதில்லை. ஒரு எம்.பி தொகுதிக்கு இரண்டு நவோதயா பள்ளிகள் துவக்க தமிழக அரசு அனுமதி அளிக்காமல் உள்ளது. நவோதயா என்ற பெயர்தான் பிரச்னை என்றால் கமாராஜர் பள்ளி என பெயர் வைத்து விடலாம். இது வந்தால் சமமான கல்வி கிடைக்கும்.

பாஜக ஆட்சி என்பது அடிப்படையில் இருந்து மாற்றம் கொண்டு வர வேண்டியது. இளைஞர்களின் வேலை வாய்ப்பின்மை உள்ள மாநிலங்களில் குஜராத், உ.பி, மகராஷ்டிரா, கர்நாடகாவை விட தமிழகத்தில் அதிகமாக 17.5 சதவீதம் உள்ளது. தமிழகம் பின் தங்க ஆரம்பித்துள்ளது, தண்ணீர் பற்றாக்குறை, தொழில்துறையில் பாதிப்பு, 20 ஆண்டுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், எதிர்காலத்தில் காமராஜரின் பெயரை சொல்லும் ஆட்சி வந்தால் மட்டுமே தப்பிப்போம் என அண்ணாமலை பேசினார். இறுதியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள், உதவித் தொகையை அண்ணாமலை வழங்கினார்.

மேலும் படிக்க | கிசுகிசு : ரகசியங்களை கசியவிடும் திருச்சிக்காரர், தலைவலியில் பூ கட்சி காக்கி மாஜி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News