25-ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு - ரயில்வே அறிவிப்பு!

நவம்பர் 25 முதல் பல ரயில்களில் முன் பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 19, 2021, 09:48 PM IST
25-ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு - ரயில்வே அறிவிப்பு!

சென்னை : நவம்பர் 25-ம் தேதி முதல் பல ரயில்களில் முன் பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.  அதன்படி முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும் ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு;

(16729) மதுரை-புனலூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் (16730) புனலூர்-மதுரை இடையே இயக்கப்படும்எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

(22609) மங்களூரு-கோவை இடையே இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் (22610) கோவை-மங்களூரு இடையே இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 6 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

(16605) மங்களூரு-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் எர்னாட் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் (16606) நாகர்கோவில்-மங்களூரு இடையே இயக்கப்படும் எர்னாட் எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது.

train

(12605) சென்னை எழும்பூர்-காரைக்குடி இடையே இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் (12606) காரைக்குடி-எழும்பூர் இடையே இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 3 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

(12635) எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் (12636) மதுரை-எழும்பூர் இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் 3 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
 
(16191) தாம்பரம்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் (16192) நாகர்கோவில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்களில் 6 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கபட்டுள்ளது.  

(12679) சென்னை சென்ட்ரல்-கோவை இடையே இயக்கப்படும் இண்டர்சிட்டி எங்ஸ்பிரஸ் ரயில் மற்றும் (12680) கோவை-சென்ட்ரல் இடையே இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 4 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

(16791) நெல்லை-பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் (16792) பாலக்காடு-நெல்லை இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 4 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

(16649) மங்களூரு-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகளும், (16650) நாகர்கோவில்-மங்களூரு இடையே இயக்கப்படும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது.

ALSO READ 48 மணி நேரத்திற்கான அவசர சிகிச்சை செலவை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News