சென்னையில் வைகோ பிரசாரம்! முழு விவரம் உள்ளே!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி ஆதரித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் 27ம் தேதி பிரசாரம் செய்கிறார்.

Last Updated : Mar 23, 2019, 12:41 PM IST
சென்னையில் வைகோ பிரசாரம்! முழு விவரம் உள்ளே! title=

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி ஆதரித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் 27ம் தேதி பிரசாரம் செய்கிறார்.

மக்களவை தேர்தலுக்கான தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐ.ஜே.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளனர். 

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 

மேலும் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி), தமாகா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரசார விவரத்தை மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில்,

இன்று மாலை 3.30 அளவில் கோவில்பட்டி தேவர் சிலை அருகில் வைகோ பேசுகிறார். 26.03.2019 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆம்பூர், பேரணாம்பட்டு , குடியாத்தம், வேலூர், மேல் விஷாரம், ஆற்காடு , ராணிப்பேட்டை முத்துக்கடை, வாலஜா, சோளிங்கர் பாணாவரம், மணப்பாக்கம், நெமிலி. மார்ச் 27 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வட சென்னை பழனியாண்டவர் கோவில் தெரு, பெரம்பூர். மார்ச் 28 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News