நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதால் அடுத்தடுத்த நகர்வுகளை மெதுவாகவும் அதேநேரத்தில் நிதானமாகவும் செய்து கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு பெரும் அரசியல் வியூக வகுப்பார்களை சந்தித்து ஆலோசனை நடத்திய அவர், அதன் பிறகு மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவ, மாணவிகளை தொகுதிவாரியாக தேர்ந்தெடுத்து பாராட்டு விழா நடத்தினார். அதில் நேரடியாக விஜய் கலந்து கொண்டு காலை முதல் இரவு வரை இருந்து அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, பரிசு கொடுத்து கவுரவித்தார். மேலும், வந்திருந்த பெற்றோர்களுக்கும் சிறப்பு கவனிப்பு இருந்தது.
மேலும் படிக்க | வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது! ஆர்.பி. உதயகுமார்!
விஜய்யின் இந்த நவடிக்கை சமூக அளவிலும், அரசியல் களத்திலும் மிகப்பெரிய பாராட்டை பெற்றது. அரசியல் கட்சி தலைவர்கள் கூட மாணவர்களுக்கு விஜய் உதவி செய்ய எடுத்திருக்கும் இந்த முன்னெடுப்பு வரவேற்புக்கு உரியது என பாராட்டினர். இது ஒருபுறம் இருக்க அரசியல் களத்திலும் இன்னொரு வடிவமான தகவலும் உருவெடுத்தது. விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதால், அடுத்த தலைமுறை வாக்காளர்களை மனதில் வைத்து இந்த யுக்தியை அவர் எடுத்திருக்கிறார். இது நிச்சயம் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு கை கொடுக்கும் என்ற பேச்சு எழுந்தது
தமிழகத்துக்கு அடுத்த சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வர இருப்பதை மனதில் வைத்தே விஜய் இப்படியான நகர்வுகளை எடுத்திருக்கிறார். இது சரியான அணுகுமுறையும் கூட என்று அரசியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். இது குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பேசும்போது, விஜய் அரசியலுக்கு வருவது உறுதி, ஆனால் அது குறித்து தலைமை தான் முடிவெடுக்கும் என்று கூறிவிட்டனர். அதனால் எப்போது வருவார்? என்ற கேள்வி மட்டுமே இப்போது பரவலாக எஞ்சியிருக்கிறது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியல் பிரவேசம் எடுப்பார் என்பது பலரின் யூகமாக இருக்கிறது.
அதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையிலேயே விஜய்யின் நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகவே நாளை பனையூரில் நடைபெறும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடனான சந்திப்பும் பார்க்கப்படுகிறது. கல்வி வருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றிருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய், தமிழகம் முழுவதும் இருக்கும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பாராட்டு தெரிவிப்பதுடன், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். மேலும், அரசியல் களத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் வழங்க இருக்கிறாராம். ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற பிரதிநிதிகளை சந்தித்த விஜய், அடுத்தாக சட்டமன்ற தேர்தலுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தயார்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு இருக்கும் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | சத்ய பிரியா கொலை வழக்கு: கொலைகாரனை குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்த நீதிமன்றம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ