கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2019, 03:25 PM IST
கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம் title=

சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியது, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேலடுக்கில் ஏற்பட்ட காற்றின் சங்கமத்தால் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

அதேபோல இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஒடிசா, தெலங்கானா, சத்திஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் கனமழை தொடரும். தென் மேற்கு பருவமழை காரணமாக  கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மழை பெய்யும். மும்பையலும் கனமழைக்கு பெய்யும் எனவும் கூறியுள்ளது.

Trending News