மக்கள் பணத்தில் ஜெ., நினைவிடம் தேவையா? உயர்நீதிமன்றம் கேள்வி!

மக்கள் வரி பணத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடத்தை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!

Last Updated : Jul 8, 2019, 04:17 PM IST
மக்கள் பணத்தில் ஜெ., நினைவிடம் தேவையா? உயர்நீதிமன்றம் கேள்வி! title=

மக்கள் வரி பணத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடத்தை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை, ஜெயலலிதா நினைவிடமாக்குவதை எதிர்த்து ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இல்லத்தை 35 கோடி மட்டுமே அரசு வாங்கு உள்ளதாக குற்றச்சாட்டிருந்தனர். ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (ஜூலை 08) விசாரணைக்கு வந்தது.  விசாரணையின் போது ஜெயலலிதா நினைவிடத்தை மக்கள் பணத்தில் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? கோடநாட்டில் ஜெயலலிதா தங்கினார் என்பதற்காக அதையும் நினைவு இல்லமாக மாற்றுவீர்களா? என நீதிதமன்றம் கேள்வி எழுப்பியது. 

ஜெயலலிதா பெயரை நிலைக்கச் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. அமைச்சர்கள் தினமும் ஜெயலலிதாவின் புகழைத்தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
 
மேலும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

Trending News