Tamil Nadu: அமித் ஷாவின் சென்னை பயணம் ரத்தானதற்கு காரணம் என்ன?

உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா பொங்கல் சமயத்தில் தமிழ்நாடு வர திட்டமிட்டிருந்தார். அவர் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமித் ஷா (Amit Shah) சென்னை வரவில்லை என்றும் அவரது தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்படுவதாகவும் திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 6, 2021, 08:16 PM IST
  • உள்துறை அமைச்சரின் சென்னைப் பயணம் ரத்து
  • பொங்கல் திருவிழாவன்று அமித் ஷா சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது
  • ரஜினி கட்சி ஆரம்பிக்காததற்கும், அமித் ஷாவின் பயணம் ரத்தானதற்கும் தொடர்பு இருக்கிறதா?
Tamil Nadu: அமித் ஷாவின் சென்னை பயணம் ரத்தானதற்கு காரணம் என்ன?  title=

உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா பொங்கல் சமயத்தில் தமிழ்நாடு வர திட்டமிட்டிருந்தார். அவர் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமித் ஷா (Amit Shah) சென்னை வரவில்லை என்றும் அவரது தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்படுவதாகவும் திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துக்ளக் (Thuglak) ஆண்டு விழாவில் பங்கேற்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வரவில்லை என்று தகவல் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெறும் துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று கூறப்பட்டது. அந்த சமயத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில்தான், உடல்நிலையை காரணம் காட்டி ரஜினிகாந்த் (Rajinikanth) கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்ற அறிவிப்பு வெளியானது. எனவே அவர் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அமித்ஷா தனது வருகையை ரத்து செய்துள்ளார். அவருக்கு பதிலாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

Also Read | 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி: ராதாகிருஷ்ணன்!

அமித் ஷாவின் சென்னைப் பயணத்தின்போது தமிழ்நாடு (Tamil Nadu) சட்டசபை தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில் அமித் ஷாவின் பயணம் ரத்தானது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR  

Trending News