அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்- வானிலை மையம்

Last Updated : Nov 2, 2017, 01:52 PM IST
அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்- வானிலை மையம் title=

தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழக முழுவதும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முதல் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. 

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் பல வீடுகளில் தண்ணீர் புகுத்துள்ளது. தண்ணீரை அகற்றும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானிலை மையம் அதிகாரி கூறியதாவது:-

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் புதுகோட்டை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டையில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

Trending News