பதவி உயர்வு.. 40 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது.. யார் இந்த டிஐஜி விஜயகுமார்?

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடல் இன்று அரசு மரியாதையும் தகனம் செய்யப்பட உள்ளது. யார் இவர்? காவல்துறையில் இவர் பெற்ற பெயர் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.  

Written by - Bhuvaneshwari P S | Edited by - RK Spark | Last Updated : Jul 7, 2023, 11:20 AM IST
  • தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார்.
  • தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டார்.
  • சொந்த ஊரில் இன்று இறுதி மரியாதை.
பதவி உயர்வு.. 40 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது.. யார் இந்த டிஐஜி விஜயகுமார்? title=

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுவரப்பட்டு இன்று அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.  தேனி மாவட்டம் போடி அருகே அணைக்கரை பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் செல்லையா - ஓய்வுபெற்ற ஆசிரியர் ராசாத்தி தம்பதியினரின் மகன் தான் விஜயகுமார். 45 வயதாகும் விஜயகுமார் தற்போது கோவை சரக டிஐஜி யாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து கீதா வாணி என்ற மனைவியும் நந்திதா என்ற மகளும் உள்ளனர். இவர் குரூப் 1 தேர்வு எழுதி 2003-ம் ஆண்டு டி.எஸ்.பியாக பணியில் சேர்ந்தார். பின்னர் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி 2009-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ்சில் தேர்வாகி, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும் சிபிசிஐடி எஸ்.பியாக பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க | அதிர்ச்சி! கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை - முதலமைச்சர் இரங்கல்

 

இவர் சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக இருந்த போது அரும்பாக்கத்தில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை 40 மணி நேரத்திற்குள் பிடித்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜியாக கடந்த ஜனவரி மாதத்தில் பணிப் பொறுப்பு ஏற்று பணியாற்றி வந்தவர்.  இன்று காலை கோவையில் உள்ள வீட்டில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

அதனைத் தொடர்ந்து அவரது உடல் தேனி மாவட்டம், தேனி ரத்னா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வர இருப்பதை ஒட்டி, உறவினர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மாலை அவரது உடல் ரத்தினம் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் தேனி மின் மயானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.  கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக விசாரணை குழு! லஞ்ச ஒழிப்புத் துறை தகவல்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News