செல்பி மோகத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் பறிபோகும் உயிர்கள்

செல்பி மோகத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 19, 2022, 09:32 AM IST
  • செம்பரம்பாக்கம் ஏரியில் உயிரிழப்பு
  • நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள்
  • செல்பி மோகத்தால் உயிரைவிட்ட பரிதாபம்
செல்பி மோகத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் பறிபோகும் உயிர்கள் title=

குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் விக்னேஷ்(20), கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் தரப்பாக்கத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட்ஸ்(16), 12ம் வகுப்பு படித்து வந்தார்.  இருவரும் மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்து மதகின் அருகே இறங்கி நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து கொண்டிருந்தனர். 

மேலும் படிக்க | அண்ணா பற்றி தெரியுமா?... எடப்பாடி பழனிசாமிக்கு புத்தகங்கள் அனுப்பிய சிவசேனாபதி

அப்போது, எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் விழுந்து முழ்கினார்கள். இதனை கண்டதும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்க முயன்றனர். இருவரையும் மீட்க முடியாததால் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய இருவரின் உடலையும் நீண்ட நேரத்திற்கு பின் இறந்த நிலையில் மீட்டனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார், இறந்து போன இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்கும் போதும், செல்பி எடுக்கும் போதும் விழுந்து இறந்து போகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி மாணவன் குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்து போனது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சவுக்கு சங்கர் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தொல்.திருமாவளவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News