தமிழக அரசுப் பள்ளி மாணவ -மாணவியர்களின் சீருடையில் மாற்றம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான சீருடையை மாற்றி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Updated: Apr 7, 2018, 09:10 PM IST
தமிழக அரசுப் பள்ளி மாணவ -மாணவியர்களின் சீருடையில் மாற்றம்!
Pic Courtesy: /tn.gov.in

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான சீருடையை மாற்றி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தற்போது நடைமுறையில் உள்ள லைட் ப்ரௌன் மற்றும் மெரூன் வண்ண சீருடையில் மாற்றம் ஏதும் இருக்காது.

9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவிகளுக்கான சீருடை, சாம்பல் நிறத்தில் முழுக்கால் சட்டை, இளஞ்சிவப்பு நிற கோடிட்ட மேல் சட்டை என அறிவிக்கப்பட்டுள்ளது.

11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான சீருடை, கருநீல வண்ணத்தில் முழுக்கால் சட்டை, கருநீல வண்ணத்தில் கோடிட்ட மேல்சட்டை என மாற்றப்படுகிறது. 

வரும் கல்வி ஆண்டுமுதல் இந்த சீருடை மாற்றம் நடைமுறைக்கு வரும் எனவும், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வழக்கம்போல் தங்களது செலவிலேயே தங்கள் சீருடைகளை வாங்கிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேலையில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சீருடைகள் அரசு தரப்பில் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது!