அதிகரிக்கும் ரீசார்ஜ் கட்டணங்கள்... ஒரு வருடம் கவலை இல்லாமல் இருக்க ‘இந்த’ பிளான் உதவும்..!!

Tarrif Hike For Postpaid & Prepaid Plans: ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஜூலை 3 முதல் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. விலை உயர்வு 15 முதல் 20 சதவீதம் வரை இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 1, 2024, 10:21 AM IST
  • ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஜூலை 3 முதல் உயர்த்தப்படும்
  • ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், 1 வருடத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
  • இரண்டு நாட்களுக்குள் ரீசார்ஜ் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை மிச்சப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
அதிகரிக்கும் ரீசார்ஜ் கட்டணங்கள்...  ஒரு வருடம் கவலை இல்லாமல் இருக்க ‘இந்த’ பிளான் உதவும்..!! title=

Tarrif Hike For Postpaid & Prepaid Plans: ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஜூலை 3 முதல் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. விலை உயர்வு 15 முதல் 20 சதவீதம் வரை இருக்கும். தற்போது, ​​விலை அதிகரிக்கும் முன், இன்னும் இரண்டு நாட்களுக்குள் ரீசார்ஜ் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை மிச்சப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் ஏர்டெல்லின் சூப்பர் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில், ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், 1 வருடத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. 

ஏர்டெல்லின் ரூ.1,799 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதாவது, 1800 ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில், உங்களுக்கு இங்கு ஒரு வருட வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், திட்டங்களின் கட்டணங்கள் அதிகரிப்பதற்கு முன்பு நீங்கள் இப்போதே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஜூலை 3 முதல் புதிய கட்டணங்கள் அமல்படுத்தப்பட்ட பிறகு ஏர்டெல் வழங்கும் இந்த திட்டத்திற்கு ரூ. 1,999 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்லின் ரூ.1,799 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடுதலாக 24ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த வரம்பு தாண்டிய பிறகு, வாடிக்கையாளர்களுக்கு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இதை விட அதிக வேக டேட்டா வேண்டுமானால் தனியாக டேட்டா வவுச்சரை வாங்கிக் கொள்ளலாம். இது தவிர, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 3600 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. இருப்பினும், இதற்கான தினசரி வரம்பு 100 SMS ஆகும். இந்த அனைத்து நன்மைகள் தவிர, Apollo 24|7 Circle, இலவச Hellotunes மற்றும் இலவச Wynk இசை ஆகியவையும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க | இந்த 5 ரீசார்ஜ் பிளான்களுக்கு இலவச 5ஜி இனி கிடையாது... என்னென்னு பாருங்க...!

உங்கள் மொபைலில் ஏர்டெல்லை இரண்டாவது சிம்மில் பயன்படுத்தினாலோ அல்லது டேட்டாவை விட அதிகமாக அழைப்பதற்கான திட்டம் தேவை என்றாலோ இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் வாங்கலாம். ஏனெனில், நீங்கள் குறைந்த கட்டணத்தில் முழு ஒரு வருட வேலிடிட்டியுடன் ஒரு திட்டத்தைப் பெறுகிறீர்கள். அழைப்பு நன்மைகள் தவிர, இதில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவையும் அடங்கும்.

மேலும் படிக்க |  எகிறும் போஸ்ட்பெய்ட் - ப்ரீபெய்ட் கட்டணங்கள்... ஜியோவைத் தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் ஏர்டெல்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News