எஸ்யூவி வாங்கினால் ரூ.2 லட்சம் வரை அதிரடி தள்ளுபடிகள்

SUV Discount Offers: மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 என்பது மஹிந்திரா நிறுவனத்தின் பிரீமியம் எஸ்யூவி கார் ஆகும். இதை வாங்கினால் ரூ.2.2 லட்சம் வரை சேமிக்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 19, 2022, 01:29 PM IST
  • எஸ்யூவி கார்கள் நீண்ட காலமாக சந்தையில் வாடிக்கையாளர்களின் தேர்வாக இருந்து வருகிறது
  • இந்த கார்களின் தேவையை கருத்தில் கொண்டு புதிய வேரியண்ட்கள் வருகின்றன.
எஸ்யூவி வாங்கினால் ரூ.2 லட்சம் வரை அதிரடி தள்ளுபடிகள் title=

எஸ்யூவி தள்ளுபடி சலுகைகள்: இந்திய வாடிக்கையாளர்களிடையே அதிகரித்து வரும் எஸ்யூவி கார்களுக்கான தேவையை கருத்தில் கொண்டு, இந்த பிரிவின் புதிய கார்களை சந்தைக்கு கொண்டு வர கார் நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன. இதுமட்டுமின்றி, எஸ்யூவி கார்களில் வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான தள்ளுபடியையும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்தியாவின் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எஸ்யூவி கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 லட்சம் வரை ரொக்க தள்ளுபடியை வழங்குகின்றன. நீங்களும் ஒரு நல்ல எஸ்யூவி காரை வீட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தால், இந்த செய்தியை கண்டிப்பாக உங்களுக்கு பயன் தரும். இந்த அறிக்கையில், எந்தெந்த கார்களில் எவ்வளவு தள்ளுபடிகள் உள்ளன என்பதை பார்போம். 

எந்தெந்த நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4: மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 என்பது மஹிந்திரா நிறுவனத்தின் பிரீமியம் எஸ்யூவி கார் ஆகும். இதை வாங்கும்போது ரூ.2.2 லட்சம் வரை சேமிக்க முழியும். நிறுவனத்திடம் இருந்து இந்த எஸ்யூவி வாங்கினால் ரூ.2.2 லட்சம் ரொக்க தள்ளுபடி கிடைக்கும். இதுமட்டுமின்றி, ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும், ரூ.11,500 கார்ப்பரேட் தள்ளுபடியும், ரூ.20,000 வரை ஆக்சஸரீஸும் உண்டு.

மேலும் படிக்க | 3ஜி, 4ஜிக்கு டாடா, இந்தியா விரைவில் 6G அறிமுகம்

ரெனால்ட் டஸ்டர்: ரெனால்ட் டஸ்டர் என்பது ரெனால்ட் இந்தியாவின் பிரபலமான எஸ்யூவி ஆகும். இதை வாங்கும்போது ரூ.1.7 லட்சம் வரை சேமிக்கலாம். நிறுவனத்திடம் இருந்து இந்த எஸ்யூவி வாங்கினால் ரூ.50,000 ரொக்க தள்ளுபடி கிடைக்கும். இது மட்டுமின்றி ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.30,000 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ.5,000 கிராமப்புற போனஸ் மற்றும் ரூ.20,000 வரை ஆக்சஸெரீஸ் வழங்கப்படுகிறது.

மாருதி சுஸுகி எஸ் கிராஸ்: மாருதி சுஸுகி இந்த எஸ்யூவியின் ஜீட்டா டிரிம் மீது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குகிறது. இதை வாங்கும்போது 60 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும். நிறுவனத்திடம் இருந்து இந்த எஸ்யூவி வாங்கினால், ஜீட்டா வகைகளில் ரூ. 20,000 மற்றும் பிற வகைகளில் ரூ. 15,000 ரொக்க தள்ளுபடி கிடைக்கும். இதுமட்டுமின்றி ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.5,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் கிடைக்கும்.

மேலும் படிக்க | ஹோலி பண்டிகையில் ஹுண்டை கார்களுக்கு கலர் கலரா கலக்கல் தள்ளுபடிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News