தென்கொரியா: எரிபொருள் கலங்களால் இயங்கும் மின்னணு வாகனங்களை ஒன்றிணைக்கப்பட உள்ள ஆடி நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் ஹூண்டாய் மோட்டார் கையெழுத்திட்டுள்ளது!
பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைப்பெற்று வந்த இந்த திட்டத்தில் இன்று இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துக்கொன்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி க்யூ மற்றும் ஆடி நிறுவனத்தின் பெற்றோர் நிறுவனமான வோல்ஸ் வேகன் நிறுவனங்களுடன் ஹூண்டாய் நிறுவனம் இணைந்து செயல்படவுள்ளது.
மேலும் ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவன கூறுகள், விநியோக சங்கிலிகள் மற்றும் காப்புரிமை உரிமங்களை ஆகியவை பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் ஐந்தாவது மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான ஹூண்டாய், 2013 இல் வெகுஜன உற்பத்தி எரிபொருள் செல் வண்டிகள் உற்பத்தியினை தொடங்கியது. ஆனால் தென் கொரியா மற்றும் பிற நாடுகளில் ஹைட்ரஜன் எரிபொருள் செல் வாகனங்களின் பரந்த தத்தெடுப்பு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பஞ்சம் பெருமளவில் காணப்பட்டது.
இதனையடுத்து தென்கொரியாவின் அரசாங்கம் ஆனது மின்னணு வாகன் விற்பனையினை உயர்த்தவும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் விதத்திலும் ஹைட்ரஜன் நிரப்பு நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.