Flipkart Offers: வெறும் 2,500 ரூபாய்க்கு Mi 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாம்

ஃபிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை (Flipkart Big Diwali Sale) தற்போது நேரலையில் உள்ளது, அங்கு Mi ஸ்மார்ட் டிவிகளுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2021, 09:36 AM IST
  • Flipkart Big Diwali Sale நேரலையில் உள்ளது.
  • Mi ஸ்மார்ட் டிவிகளுக்கு பெரும் தள்ளுபடி உள்ளது.
  • 32 அங்குல ஸ்மார்ட் டிவி மிகவும் மலிவாக கிடைக்கும்
Flipkart Offers: வெறும் 2,500 ரூபாய்க்கு Mi 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாம் title=

ஆன்லைன் ஈ காமர்ஸ் தளமான பிளிப்கார்ட், தீபாவளியையொட்டி மெகா விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவி முதல் பல பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி (Diwali 2021) கொண்டாடப்பட உள்ளது. பல பெரிய நிறுவனங்கள் தீபாவளிக்கான போனஸ்களையும் ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில், ஆன்லைன் ஈ காமர்ஸ் தளமான பிளிப்கார்ட், பண்டிகையையொட்டி பிக் தீபாவளி விற்பனை அறிவித்துள்ளது. இதில், ஸ்மார்ட் டிவி முதல் பல்வேறு பொருட்களுக்கு அதிரடி சலுகை விலைகளும், ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கூடுதலான சில சிறப்பு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஃப்ளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை (Flipkart Big Diwali Sale) நடைபெற்று வரும் நிலையில் Mi இன் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. கிடைக்கிறது. தன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை இங்கே விரிவாக அறிந்து கொள்வோம்.

ALSO READ | இளைஞனின் ‘தற்கொலை’ முயற்சி; BMW காருக்கு நேர்ந்த சோதனை..!!

Mi 4A PRO 32 inch Smart Android TV
Flipkart Big Diwali Sale இல் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியில் 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த டிவியின் ஒரிஜினல் விலை ரூ .14,999 ஆகும். ஆனால் இந்த விற்பனையில் மேலும் மலிவாக வாங்கலாம். சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், நீங்கள் 2,500க்கு இந்த டிவியை வாங்க முடியும். நீங்கள் SBI கிரெடிட் கார்டு மூலம்  Mi 4A PRO 32 inch ஸ்மார்ட் டிவியை வாங்கினால், உங்களுக்கு 10% வரை தள்ளுபடி கிடைக்கும் (ரூ .1500 வரை).

இந்த ஸ்மார்ட் டிவியில் ரூ .11,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. உங்கள் பழைய டிவியை மாற்றினால், அதில் 11 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். உங்கள் பழைய டிவியின் நிலை நன்றாக இருந்தால் மற்றும் மாடல் சமீபத்தியதாக இருந்தால் மட்டுமே நீங்கள் முழு தள்ளுபடியைப் பெற முடியும்.

ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News