பெண்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய 3 செயலிகள்... எப்போதும் உதவிக்கு ஓடோடி வரும்!

SOS Emergency Apps: பெண்கள் உள்பட பலரும் உங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய மூன்று செயலிகள் என்ன என்பது இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 16, 2023, 02:15 PM IST
  • பல அவசர உதவி செயலிகள் உள்ளன.
  • SOS செயலிகள் பெண்கள் உள்பட பலருக்கும் உதவியாக இருக்கும்.
  • அந்த வகையில் இந்த மூன்று செயலிகள் மிக முக்கியமானவை.
பெண்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய 3 செயலிகள்... எப்போதும் உதவிக்கு ஓடோடி வரும்!  title=

SOS Emergency Apps: நீங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத சூழல்களையும், சந்தர்பங்களையும் சந்திக்கும் போது, தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில் அதில் தீர்வை காணவும், பாதுகாப்பாக மீளவும் பல்வேறு வழிகள் இருக்கின்றன. விபத்தில் சிக்கினாலோ அல்லது மருத்துவ ரீதியிலான அவசரமோ அல்லது வேறு பிரச்னைகளோ உங்களுக்கு சரியான நேரத்தில் உதவி பெறுவது மிகவும் முக்கியம். 

தற்போது அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. சிக்கல் மிகுந்த அவசர காலங்களில் ஸ்மார்ட்போன் நமக்கு மிகவும் பயனுள்ள கருவியாக மாறும். நமது ஸ்மார்ட்போனில் சில செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் மூலம், உங்கள் பிரச்சனைக்கு உடனடியாக உதவியைப் பெறலாம். நமது இருப்பிடத்தை நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உடனடியாக அனுப்பக்கூடிய சில செயலிகள் உள்ளன. 

இதன் மூலம் நீங்கள் உடனடியாக அவர்களின் உதவியை நாடலாம். பெண்கள் பெரும்பாலும் இரவில் அல்லது தனியாக பயணம் செய்யும் போது விரும்பத்தகாத சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். அத்தகைய சூழ்நிலையில், SOS செயலிகள் பெண்கள் உள்பட பலருக்கும் உதவியாக இருக்கும். அந்த வகையில், உங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய மூன்று செயலிகள் என்ன என்பது இங்கு காணலாம்.

மேலும் படிக்க | வெறும் 2 ரூபாய்க்கு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆஃபர்

Red Panic Button

எந்த அவசர காலத்திலும் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு செயலி, Red Panic Button. இந்த செயலி iOS மற்றும் Android இயங்குதளங்களில் கிடைக்கிறது. ரெட் பேனிக் பட்டன் செயலியை பயனர்களால் எளிதாக பயன்படுத்த இயலும். உங்கள் தொடர்புகளை (Contacts) சேர்த்தால் போதும். இதற்குப் பிறகு, நீங்கள் SOS பொத்தானைச் செயல்படுத்தலாம்.

Walk Safe

இந்த செயலி, இரவில் தனியாக நடக்கும்போது உங்களை பாதுகாப்பாக உணர வைக்கும். காவல்துறை தரவின் அடிப்படையில் அதிக குற்றப் பகுதிகளுக்குச் செல்வதை இந்த செயலி தடுக்கிறது. Walk Safe செயலி உங்கள் இருப்பிடத்தைக் கண்காணித்து, அதிக குற்றப் பகுதிக்குள் நுழைந்தால் உங்களுக்கு எச்சரிக்கையை அனுப்பும். 

அத்தகைய பகுதியில் இருந்து வெளியேறுவதற்கான சரியான பாதையையும் இந்த செயலி உங்களுக்குச் சொல்கிறது. இந்த செயலியில் SOS பட்டனும் உள்ளது. நீங்கள் ஏதேனும் விரும்பத்தகாத சூழ்நிலையை எதிர்கொண்டால், இந்த பொத்தானை அழுத்துவதன் மூலம் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்களுக்கு (Contacts) மெசேஜ் அனுப்பலாம். இந்த செய்தி உங்கள் இருப்பிடம் மற்றும் நிலை பற்றிய தகவலையும் வழங்குகிறது.

bsafe

bSafe என்பது எந்த சூழ்நிலையிலும் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் செயலியாகும். இந்த செயலி iOS மற்றும் Android இயங்குதளங்களில் கிடைக்கிறது. bSafe செயலி பயனர்களுக்கு பயன்படுத்த மிகவும் எளிமையானதாகும். செயலியை திறந்த பிறகு, உங்கள் தொடர்புகளை (Contacts) சேர்த்தால் போதும். 

இதற்குப் பிறகு, நீங்கள் SOS பொத்தானைச் செயல்படுத்தலாம். நீங்கள் SOS பொத்தானை அழுத்தியதும், bSafe ஆப்ஸ் உங்கள் தொடர்புகளுக்கு உங்கள் நேரலை இருப்பிடத்துடன் (Live Location) ஒரு மெசேஜை அனுப்பும். இது தவிர, ஆப்ஸ் உங்கள் போனின் கேமரா மற்றும் மைக்கை ஆன் செய்து ஆடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டு செய்யத் தொடங்கும்.

மேலும் படிக்க | 6ஜிபி RAM... ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக... அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் அமேசானில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News