iPhone 13-ல் பம்பர் தள்ளுபடி: பிளிப்கார்டில் அதிரடி சலுகை

Flipkart iPhone 13 Discount: பிளிப்கார்டில் ஐபோன் வாங்க பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மிகக்குறைந்த விலையில் ஐபோனை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 30, 2022, 05:05 PM IST
  • பிளிப்கார்டில் ஐபோன் 13-ல் மிகப்பெரிய சலுகை.
  • இந்த டீலை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  • பிளிப்கார்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் ரூ.2000 கூடுதல் தள்ளுபடியும் வழங்குகிறது.
iPhone 13-ல் பம்பர் தள்ளுபடி: பிளிப்கார்டில் அதிரடி சலுகை title=

ஆப்பிள் ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட இன்னும் சில நாட்களே உள்ளன. எனினும், உங்களுக்கு இன்னும் ஐபோன்13 வாங்கும் எண்ணம் இருந்தால், உங்களுக்கான ஒரு நல்ல செய்தி உள்ளது. பிளிப்கார்ட் ஐபோன் 13 ஸ்மார்ட்போனில் ஒரு தனித்துவமான சலுகையை வழங்குகிறது. ஐபோன் 13-ன் அசல் விலை ரூ.79,900 ஆகும். பிளிப்கார்ட்டில் ரூ.14,000 தள்ளுபடியுடன் இது பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த டீலை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஃபோன்களை மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் புதிய ஃபோன்களில் ரூ.19,000 வரை தள்ளுபடி பெறலாம். இது தவிர, எச்சிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் 13-ல் 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். 

இந்த டீலை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதை அறிந்து கொள்ளுங்கள்

ஐபோன் 13-ன் விலை முதலில் 128 ஜிபி-க்கு ரூ.79,900 ஆக இருந்தது. இது பிளிப்கார்ட்டில் ரூ.65,999க்கு விற்கப்படுகிறது. இது ஐபோன் 13க்கான மிகக் குறைந்த விலையாகும். ஐபோன் 13 அமேசானில் 69,900க்கு விற்கப்படுகிறது. பிளிப்கார்ட் டீல் ஸ்மார்ட்போனில் மிக நல்ல தள்ளுபடிகளை வழங்குகிறது. ரூ.14,000 பிளாட் தள்ளுபடி தவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போன்களை கொடுத்து ரூ.19,000 வரை தள்ளுபடி பெறலாம். 

மேலும் படிக்க | மற்றொரு மைல்கல்லை அடையப் போகும் ஜியோ நிறுவனம் 

பிளிப்கார்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் ரூ.2000 கூடுதல் தள்ளுபடியும் வழங்குகிறது. ஐபோன் 11, இபோன் 12 மற்றும் பல ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் தள்ளுபடி பொருந்தும். இருப்பினும், உங்கள் பழைய ஐபோனின் பரிமாற்ற சலுகை விலை பெரும்பாலும் போனின் நிலை மற்றும் தயாரிக்கப்பட்ட ஆண்டைப் பொறுத்தது. 

ஐபோன் 13 விவரக்குறிப்புகள்

ஐபோன் 13 ஆனது 2532×1170 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 460ppi பிக்சல் டென்சிடி கொண்ட 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஐபோன் 13 A15 Bionic ஆனது 5nm hexa-core செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 128GB, 256GB மற்றும் 512GB உள்ளிட்ட மூன்று சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் iOS 15 இல் இயங்குகிறது. 

ஆப்டிக்ஸைப் பொறுத்தவரை, ஐபோன் 13 பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 12எம்பி- முதன்மை கேமரா உள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 12 மெகாபிக்சல் லென்ஸ் உள்ளது. ஆப்பிள் ஐபோன்களின் பேட்டரி விவரக்குறிப்புகளை வெளியிடவில்லை என்றாலும், ஐபோன் 13-ல் 3240mAh பேட்டரி உள்ளது. இது 20W வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் சபோர்டுடன் வரும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | 5G Network in India: விரைவில் 5G ... Reliance Jioவின் முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

 

Trending News