OnePlus 9 Discount Offer: இன்றைய காலத்தில், ஐபோன் ஸ்மார்ட்போனுக்கு, OnePlus கடுமையான போட்டியை அளிக்கிறது. ஐபோன் மற்றும் சாம்சங் உடன், இப்போது வாடிக்கையாளர் மத்தியில் ஒன்பிளஸின் தேவையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மக்கள் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை அதிகளவில் வாங்குகின்றனர்.
பயனர்களிடையே உள்ள தேவையைக் கருத்தில் கொண்டு, நிறுவனம் தனது புதிய மற்றும் சமீபத்திய ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது. சமீபத்தில், நிறுவனம் OnePlus 9 தொடரை அறிமுகப்படுத்தியது, அதன் கீழ் OnePlus 9, Oneplus 9R ஆகிய போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நீங்களும் OnePlus ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இப்போது உங்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், தற்போது இதில் ரூ .21,000 வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த தள்ளுபடியை எப்படி பெறுவது என்று இங்கே காணலாம்.
ஒன்பிளஸ் 9 இல் அதிரடி தள்ளுபடி
ஒன்பிளஸ் 9 இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ .49,999 ஆகும். ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon) இந்த போனை சலுகைகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. இப்போது நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை மிகவும் மலிவாக வாங்க முடியும்
எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்
உங்களிடம் ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு (HDFC Credit Card) இருந்தால் முதலில் ரூ .3,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இந்த வகையில், ரூ .49,999 ஸ்மார்ட்போனை ரூ .46,999 க்கு வாங்க முடியும். இது தவிர, இப்போது நீங்கள் இதில் பரிமாற்ற சலுகையையும் பெறலாம். பயனர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றி ரூ .18,150 வரை தள்ளுபடி பெறலாம். அதாவது, ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் ரூ .21000 வரை தள்ளுபடி பெறலாம்.
ALSO READ: OnePlus 9 தொலைபேசி 50% தள்ளுபடியில் கிடைக்கிறது: எங்கே? முழு விவரம் இதோ
ஒன்பிளஸ் 9 இன் விவரக்குறிப்புகள்
இந்த ஸ்மார்ட்போனில் (Smartphone) 6.55 இன்ச் HD + AMOLED டிஸ்ப்ளே கிடைக்கிறது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் இந்த போனில் கிடைக்கிறது. டிஸ்பிளேவைப் பாதுகாக்க கொரில்லா கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. செயலியைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் வகைகளைப் பெறலாம்.
ஒன்பிளஸ் 9 கேமரா
ஒன்பிளஸ் 8 டி போல, ஒன்பிளஸ் 9 இல் உள்ள முதன்மை கேமரா 48 எம்.பி கொண்டது. இது சோனி IMX689 இன் சென்சார் கொண்டுள்ளது. இது தவிர, இந்த ஸ்மார்ட்போன் 8K மற்றும் 4K வீடியோ பதிவை ஆதரிக்கிறது. இந்த போனின் கேமராவில், 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, தொலைபேசியில் 16 எம்பி செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
ALSO READ: Motorola Moto G50: Budget விலையில் அசத்தலான 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR