Flipkart சலுகை! 21,000 ரூபாய் தள்ளுபடியில் விவோவின் ஃபோன்

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்: விவோவின் நிறத்தை மாற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் பெரும் தள்ளுபடியில் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2022, 01:24 PM IST
  • பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை நடந்து வருகிறது.
  • ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற தயாரிப்புகளில் பெரிய தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
  • விவோ வி 23 மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்.
Flipkart சலுகை! 21,000 ரூபாய் தள்ளுபடியில் விவோவின் ஃபோன் title=

புதுடெல்லி. ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்: பிக் சேவிங் டேஸ் சேல் பிளிப்கார்ட்டில் நடந்து வருகிறது. இந்த விற்பனை மார்ச் 12 முதல் தொடங்கி மார்ச் 16 வரை நடைபெறும். விற்பனையின் போது, ​​ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கும். நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், இன்று சிறந்த வாய்ப்பு. 

தற்போது அனைவரிடையே 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு அதிக மோகம் உள்ளது. அனைத்து நிறுவனங்களும் தங்கள் சொந்த 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது மலிவான விலையில் அத்தகைய அற்புதமான 5ஜி போனை வாங்க சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. ஆம்., விவோ வி23 மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும். சலுகைகளைப் பெறுவதன் மூலம் போனை பாதி விலையில் வாங்கலாம். எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | 3ஜி, 4ஜிக்கு டாடா, இந்தியா விரைவில் 6G அறிமுகம்

ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல்: விவோ வி23 5ஜி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
விவோ வி23 5ஜி இன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் தொடக்க விலை ரூ.34,990 ஆகும், ஆனால் பிளிப்கார்ட் விற்பனையில் இந்த போன் ரூ.29,990க்கு கிடைக்கிறது. அதாவது போனுக்கு 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, பல வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உள்ளன, இதன் காரணமாக தொலைபேசியின் விலை இன்னுமும் குறையும்.

ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல்: விவோ வி23 5ஜி வங்கி சலுகைகள்
எஸ்பிஐயின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் பணம் செலுத்தி போனை வாங்கினால் 3 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும், அதாவது போனின் விலை ரூ.26,990 ஆக ஆகும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு.

ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல்: விவோ வி23 5ஜி எக்ஸ்சேஞ்ச் சலுகை
விவோ வி23 5ஜியில் ரூ.13,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த மெகா தள்ளுபடி பெறலாம். போனின் கண்டிஷன் நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால்தான் 13 ஆயிரம் ரூபாய் ஃபுல் ஆஃப் கிடைக்கும். நீங்கள் முழுமையாகப் பெற முடிந்தால், போனின் விலை ரூ.13,990 ஆக ஆகும்.

மேலும் படிக்க | Amazon Fab Phones Fest: ரூ. 1,649க்கு Xiaomi 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News