சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் oneplus வெள்ளிக்கிழமை oneplus 8 Pro 5G விற்பனையானது வரும் ஜூன் 15 முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆரம்பத்தில் இது மே 29 அன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. எனினும் பின்னர் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஸ்மார்ட்போன் விற்பனை தடைப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜூன் 15 முதல் விற்பனையினை தொடங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
OnePlus இந்தியாவின் சந்தைப்படுத்தல் தலைவராக சித்தாந்த் நாராயணன்...
இதுதொடர்பான அறிக்கையில் நிறுவனம்., "oneplus 8 வரிசை 5G-க்கு தொடர்ச்சியான விநியோகத்தை வழங்குவதே எங்கள் குறிக்கோள். இந்த தயாரிப்பின் குறைந்த பங்கு காரணமாக, நாங்கள் அதை குறைந்த விற்பனையில் சந்தைக்குக் கொண்டு வருகிறோம்.” என குறிப்பிட்டுள்ளது. தகவல்கள் படி இந்தியாவில், oneplus 8 Pro 8GB ROM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகைகளின் விலை ரூ.54,999-ஆகவும் 12GB ROM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகைகளின் விலை ரூ.59,999-ஆகவும் இருக்கும் என தெரிகிறது.
சீனாவில் 5G ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது OnePlus 8, OnePlus 8 Pro...
oneplus 8 Pro 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.78" QHD Plus திரவ காட்சியுடன் வருகிறது. ஸ்மார்ட்போன் ஸ்வாப்டிராகன் 865 சிப் ஆதரவுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 55 5G மோடம்-RF சிஸ்டத்துடன் வருகிறது. இந்த சாதனம் 30 சதவிகிதம் வேகமான மெமரி வேகம் மற்றும் 20 சதவிகிதம் சக்தி திறன் மற்றும் 256GB உள் சேமிப்பு மற்றும் 12GB ROM ஆகியவற்றைக் கொண்டுள்ளது.