ரீசார்ஜ் ப்ளான்கள் ஒப்பீடு: வோடாஃபோனா இல்லை ஜியோவா: இது ரூ 299 ப்ரீபெய்ட் ஒப்பீடு

Vodafone Idea VS Jio: ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலை ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றில் கிடைக்கும் நன்மைகள் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 15, 2022, 11:36 AM IST
  • ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் சிறந்தது வோடாஃபோனா இல்லை ஜியோவா
  • ஒரே மாதிரியான விலைகளுடன் பல திட்டங்கள்
  • ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோ ஒப்பீடு
ரீசார்ஜ் ப்ளான்கள் ஒப்பீடு: வோடாஃபோனா இல்லை ஜியோவா: இது ரூ 299 ப்ரீபெய்ட் ஒப்பீடு title=

Vi VS JIo: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டியாக ஒரே மாதிரியான விலைகளுடன் பல ப்ரீ-பெய்ட் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. ரூ.299 திட்டத்தை வோடோஃபோன் மற்றும் ஜியோ இரண்டுமே கொடுக்கின்றன.

இந்தத் திட்டங்களின் விலை ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றில் கிடைக்கும் நன்மைகள் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை. Vi (Vodafone Idea) ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தை ஜியோவின் ரூ.299 திட்டத்துடன் ஒப்பிட்டால் இரண்டில் எது சிறந்தது என்று தெரிந்துக் கொள்லலாம். எந்த நிறுவனம் 299 ரூபாய் திட்டத்தில் சிறந்த பலன்களை வழங்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

Vi (வோடாஃபோன் ஐடியா) ரூ 299 ரீசார்ஜ் திட்டம்
Vodafone Idea நிறுவனம் 28 நாட்கள் வரை செல்லுபடியாகும் ரூ.299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில், வரம்பற்ற அழைப்புகள் உண்டு. இது தவிர, தினசரி 1.5 ஜிபி டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

28 நாட்கள் வேலிடிடி கொண்ட இந்த திட்டத்தில் பயனர்கள் மொத்தம் 42 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். தினசரி டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, இந்தத் திட்டத்தில் கிடைக்கும் இணைய வேகம் 64Kbps ஆகக் குறையும். இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

மேலும் படிக்க | 80 ஜிபி டேட்டா மற்றும் 80 நாட்கள் வேலிடிடி ரூ 399 ரீசார்ஜ் ப்ளான்

வோடாபோனின் இந்தத் திட்டத்தில், இரவு தரவு மற்றும் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் வசதியும் உண்டு. நைட் டேட்டா பெனிஃபிட்டின் கீழ், வாடிக்கையாளர் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டாவைப் பயன்படுத்தலாம், அதுவும் முற்றிலும் இலவசம். இது தவிர, வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் பெனிபிட்டில், பயனர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை பயன்படுத்தாமல் வைத்துள்ள மீதமுள்ள டேட்டாவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தலாம்.

ஜியோ ரூ 299 ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் 299 ரூபாய் திட்டம் 28 நாட்கள் வரை செல்லுபடியாகும் திட்டமாகும். இருப்பினும், ஜியோவின் திட்டத்தின் வாடிக்கையாளர்கள், வோடாபோனின் தினசரி 1.5 ஜிபிக்கு பதிலாக தினசரி 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள்.

28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவைப் பெறுவதன் படி, திட்டத்தின் கீழ் பயன்படுத்த பயனர்கள் மொத்தம் 56 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். தினசரி டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு இணைய வேகம் @64Kbps ஆக குறைகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும், வரம்பற்ற அழைப்பும் உள்ளது.

மேலும் படிக்க | UPI பேமெண்ட் மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News