புதுடெல்லி: தொழில்நுட்ப நிறுவனங்களில் உலக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை குறைவது மற்றும் நவீன சிந்தனைகளின் பற்றாக்குறையால் அந்த நிறுவனம் மிகவும் பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகியோரால் நிறுவப்பட்ட ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாவது மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது.
ஆனால், நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் இருவரும் வெளியேறிய பிறகு பின்னிஷ் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பக் கழகம் செய்த தவறுகளை மீண்டும் செய்வதாக கூறப்படுகிறது.
1970களின் பிற்பகுதியில் தொடங்கிய ஆப்பிள் நிறுவனத்தின் (Apple the Tech Giant) வெற்றி, ஜாப்ஸ் மற்றும் வோஸ்னியாக் வெளியேறிய பிறகு தடுமாறியது. பிறகு 1990களின் பிற்பகுதியில், நிறுவனம் புத்துயிர் பெற்றது. ஜாப்ஸ் மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தற்போது மீண்டும் ஆப்பிள் பல சிக்கல்களை சந்திக்கிறது.
விற்பனை குறைதல், சர்ச்சைகள் மற்றும் புதுமையின் பற்றாக்குறை அனைத்தும் ஆப்பிளின் அழிவுக்கு வழிவகுக்கும்.
Also Read | டிசம்பர் 31 வரை ஆப்பிள் iPhone-களுக்கு அதிரடி ஆப்பர்!
பிராண்டைப் பாதுகாப்பதற்காக நிறுவனத்தின் புகழ்பெற்ற சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பை மாற்றியமைத்தது நிறுவனத்தின் மிகப்பெரிய பிரச்சினையாகும், இந்த முக்கிய கட்டத்தில் முந்தைய உத்திகளை கடைபிடிப்பது சரியாக இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஃபின்னிஷ் தொலைத்தொடர்பு நெட்வொர்க் உபகரண உற்பத்தியாளரான நோக்கியா, சந்தையின் யதார்த்த நிலையையை புரிந்துக் கொளவதிலும், நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தோற்றுப்போனதாக கருதப்படுகிறது.
நோக்கியாவின் அழிவுக்கு ஐபோன் தான் காரணம் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் அதே சூழ்நிலையை தற்போது ஆப்பிளும் எதிர்கொள்வதாகத் தெரிகிறது. கால சுழற்சியில் நோக்கியா செய்த தவறுகளை ஆப்பிள் தற்போது செய்வதாகக் கூறப்படுகிறது.
நோக்கியாவின் தலைவரான Risto Siilasmaa எழுதிய புத்தகத்தின்படி, நோக்கியாவின் வீழ்ச்சிக்கு தலைமையின் பற்றாக்குறை மற்றும் மோசமான செய்திகளை எதிர்கொள்ள இயலாமை தான் காரணமாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
ALSO READ | Bank Facility: வங்கிக் கணக்கில் பணமே இல்லை! ஆனாலும் பணம் எடுக்கலாம்!
நோக்கியாவின் வீழ்ச்சிக்கும், ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன் ஜாம்பவானாக உருவெடுத்ததற்கும் பிரிக்க முடியாத இணைப்பு உள்ளது.
உலகளாவிய மந்தநிலையின் போது வோல் ஸ்ட்ரீட் கணிப்புகளை எப்போதும் சிதைத்து வெற்றிக்கொடி நாட்டிவந்த ஆப்பிள், அதன் வெல்ல முடியாத பிம்பத்தை இழக்கத் தொடங்குயிருக்கிறது.
உலகளாவிய விநியோகச் சங்கிலி சிக்கல்களின் விளைவாக, நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ஆப்பிளின் (Apple the Tech Giant) வருவாய் $6 பில்லியன் குறைந்துள்ளது. ஒரு வருடத்திற்குள், வணிகமானது வால் ஸ்ட்ரீட் இலக்குகளை இரண்டு முறை தவறவிட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிடிம் குக், இப்போது பொருளாதாரம், புதிய வெளியீடுகள் மற்றும் நுணுக்கமான வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் பற்றி அதிகம் சிந்தித்து செயல்பட்டால் தான் வீழ்ச்சியில் இருந்து ஓரளவாவது மீள முடியும்.
சமீபத்திய அறிக்கையின்படி, உலகளாவிய மின் சிப் பற்றாக்குறை காரணமாக ஆப்பிள் தனது புதிய ஐபோனின் உற்பத்தி நோக்கங்களை விடுமுறைக்கு முன்பே அடைய வாய்ப்பில்லை.
ALSO READ | Rules Change: மாறும் விதிகள்! புத்தாண்டில் தபால் நிலைய வங்கியின் கட்டணங்கள் உயர்கிறது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR