இன்பினிக்ஸ் எக்ஸ் 1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி சீரீஸ் மாடல்கள் ஆனது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்பினிக்ஸ் எக்ஸ் 1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி சீரீஸ் மாடல்கள் தற்போது பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படுகின்றன மற்றும் இந்த தள்ளுபடி வருகிற செப்டம்பர் 16 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.
இன்பினிக்ஸ் எக்ஸ் 1 (Infinix X1 Android Smart TV) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி சீரீஸ் மாடல்கள் விவரம்:
* 32-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ் 1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி
* 40-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ் 1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி
* 43-இன்ச் டிஸ்பிளே கொண்ட இன்பினிக்ஸ் எக்ஸ் 1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி
ALSO READ: மிகவும் மலிவான விலையில் 6 ஜிபி ரேம் கொண்ட Xiaomi பட்ஜெட் ஸ்மார்ட்போன்
இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகள் (Smart TV) கடந்த டிசம்பர் 2020 இல் தொடங்கப்பட்டது. மேலும் இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளுமே மீடியா டெக் குவாட் கோர் ப்ராசஸர் உடன் 1 ஜிபி ரேம்-ஐ பேக் செய்கின்றன.
இன்பினிக்ஸ் X1 ஸ்மார்ட் டிவி மீது என்ன சலுகை:
* Flipkart வழியாக, இன்பினிக்ஸ் எக்ஸ் 1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள் மீது ரூ.3000 வரையிலான வரையறுக்கப்பட்ட கால தள்ளுபடி கிடைக்கும்.
* இன்பினிக்ஸ் 1 எக்ஸ் ஸ்மார்ட் டிவி தொடரின் மீதான தள்ளுபடிகள் செப்டம்பர் 12 தொடங்கி செப்டம்பர் 16 வரை அணுக கிடைக்கும்.
* இன்பினிக்ஸ் எக்ஸ் 1 40-இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும் - (ஒரிஜினல் விலை ரூ.26,990 ஆகும்).
* 32- இன்ச் அளவிலான இன்பினிக்ஸ் எக்ஸ் 1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி ரூ.14,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது - ( ஒரிஜினல் விலை ரூ.17,999 ஆகும்).
* 43-இன்ச் அளவிலான இன்பினிக்ஸ் எக்ஸ்1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி ரூ.22,999 க்கு கிடைக்கிறது - ( ஒரிஜினல் விலை ரூ.24,999 ஆகும்).
இன்பினிக்ஸ் X1 சீரீஸ் மாடல்களின் அம்சங்கள்:
* 32-இன்ச் ஸ்மார்ட் டிவியில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், பெஸல்லெஸ் வடிவமைப்பு மற்றும் எபிக் 2.0 பிக்சர் எஞ்சின் ஆகியவற்றுடன் கூடிய எச்டி எல்இடி டிஸ்ப்ளே உள்ளது. இதில் 400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை வழங்குகின்றன மற்றும் HDR10-ஐ ஆதரிக்கின்றன. மேலும் TUV ரெய்ன்லேண்ட் சான்றிதழுடன் வருகின்றன. 32 இன்ச் இன்ஃபினிக்ஸ் X1 மாடல் ஆனது டால்பி ஆடியோவுடன் 20W பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் வருகிறது.
* 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது Full எச்டி எல்இடி டிஸ்ப்ளேவை 350 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 மற்றும் எச்எல்ஜி ஆதரவுடன் கொண்டுள்ளது. பெஸல்லெஸ் வடிவமைப்பில் வருகிறது மற்றும் ஐகேர் தொழில்நுட்பத்துடன் எபிக் 2.0 பிக்சர் எஞ்சினையும் பயன்படுத்துகிறது. இது மாலி -470 ஜிபியு, 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் எம்டிகே 6683 64-பிட் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவி டால்பி ஆடியோ ஆதரவுடன் 24W பாக்ஸ் ஸ்பீக்கர்களை பேக் செய்கிறது.
* 43-இன்ச் ஸ்மார்ட் மேற்கூறிய அதே அம்சங்களுடன் வருகிறது ஆனால் Full எச்டி எல்இடி டிஸ்ப்ளேவை வழங்குகிறது. இதில் 400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை வழங்குகின்றன மற்றும் HDR10-ஐ ஆதரிக்கின்றன. மேலும் TUV ரெய்ன்லேண்ட் சான்றிதழுடன் வருகின்றன. 43 இன்ச் இன்ஃபினிக்ஸ் X1 மாடலோ, 24W பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் வருகிறது.
ALSO READ: 5,000mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமானது Vivo Y21 ஸ்மார்ட்போன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR