கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் இந்த தவறை செய்ய வேண்டாம்

கொரோனா நிதி என்ற பெயரில் சில மோசடிகள் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க இந்தியாவின் மிகப்பெரிய வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 3, 2020, 08:25 PM IST
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் இந்த தவறை செய்ய வேண்டாம்

புதுடில்லி: தற்போது, ​​நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய்க்கு எதிராக பல நடவடிக்கைகளை அரசாங்கம்  எடுத்து வருகிறது. நாட்டின் குடிமக்களுக்கு பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டு, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு பங்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும், அவசர தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அரசு அறிவித்துள்ளது. மேலும் 21 நாட்கள் என நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தாலும்,  மறுபுறம் பலர் சைபர் கிரைம் கவலையை எதிர்கொள்கின்றனர். 

இந்த நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பலர் தரப்பினர் நிதி அளித்து வருகின்றனர். இருப்பினும், கொரோனா நிதி என்ற பெயரில் சில மோசடிகள் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க இந்தியாவின் மிகப்பெரிய வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ட்வீட் செய்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூறியதாவது: "உலகம் முழுவதும் ஆபத்தான கொள்ளைநோயை எதிர்த்துப் போராடுகிறது. இணைய குற்றவாளிகள் அதை தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம்" எனப் பதிவிடுள்ளது. 

எஸ்பிஐ வழங்கிய வழிமுறைகளை பின்பற்றினால் ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க முடியும். அதைக்குறித்து பார்ப்போம்....!

எஸ்பிஐ வழங்கிய பரிந்துரைகள் யாவை?

- மோசடி ஆபரேட்டர்கள் யுபிஐ ஐடிகள் வழியாக நன்கொடை கோருகின்றனர். யுபிஐ ஐடியைப் பயன்படுத்தி நன்கொடை கோரும் இந்த வகை மோசடிகாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வங்கி கூறுகிறது. 

- உங்கள் வருவாயை நன்கொடையாக அளிப்பதற்கு முன்பு 100 முறை யோசித்து சிந்தித்து செயல்படுங்கள் என்று வங்கி தெரிவித்துள்ளது.

- ஒரு நிதியை நன்கொடையாக அளிப்பதற்கு முன், நிதி யாருக்கு செல்கிறது என்பதை அடையாளம் காண்பது முக்கியம் என்று வங்கி கூறுகிறது.

- உங்கள் அட்டை விவரங்களை எந்த ஈ-காமர்ஸ் தளத்திலும் சேமிக்க வேண்டாம்.

- உங்கள் முக்கியமான தகவல்களை தேவையற்ற மின்னஞ்சல்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

- கொரோனா வைரஸ் தொடர்பான எந்த செய்தியையும் கிளிக் செய்வதற்கு முன் அதைச் சரிபார்க்கவும்.

- உத்தியோகபூர்வ ஆதாரங்களுடன் மட்டுமே உங்கள் தகவல்களைப் பகிரவும்.

- ஏதேனும் மோசடி குறித்து உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், உடனடியாக அறிக்கையை வங்கியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர் நரேந்திர மோடி, பி.எம்.கேரேஸ் நிதியை அமைத்து, நாட்டின் குடிமக்களுக்கு பங்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதையும் பயன்படுத்திக்கொண்ட சைபர் குற்றவாளிகள், PMcares நிதி போல இருக்கும் போலி செய்திகளை உங்களுக்கு அனுப்பி நன்கொடை அளிக்க சொல்வார்ட்கல். உங்களுக்கு அனுப்பப்படும் Link குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் நிதி பங்களிப்பு செய்யுமாறு கேட்கப்படும். மிகுந்த எச்கரிக்கை தேவை.

More Stories

Trending News