மனைவி உடன் சுற்றுலா போகும்போது... கணவன்மார்களே மறந்தும் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்!

Relationship Tips: திருமணத்திற்கு பின் தம்பதியாக சுற்றுலா செல்கிறீர்கள் என்றால், நீங்கள் தெரிந்துகூட இந்த 5 தவறுகளை செய்துவிடாதீர்கள். இது பெரிய சிக்கலை உறவில் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 29, 2024, 09:44 PM IST
  • திருமண உறவில் தம்பதிகள் சுற்றுலா செல்வது அவசியம்.
  • சுற்றுலா செல்வதால் இருவரும் தனியாக நேரம் செலவிடலாம்.
  • இது ஆரோக்கியமான உறவுக்கு இட்டுச் செல்லும்.
மனைவி உடன் சுற்றுலா போகும்போது... கணவன்மார்களே மறந்தும் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்! title=

Relationship Tips In Tamil: கணவன் - மனைவி உறவு ஆரோக்கியமாக இருக்க தம்பதிகள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையான உரையாடல், அதிக நேரம் செலவிடல் உள்ளிட்ட பல விஷயங்களில் தம்பதிகள் கவனம் செலுத்துவது அவசியம். அப்படியிருக்க, குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது கணவன் - மனவி மட்டும் அதாவது குழந்தைகள், பிற குடும்பத்தினர்கள் இன்றி வெளியூருக்கு, வெளி மாநிலங்களுக்கு செல்ல திட்டமிடுங்கள். அதேபோல், குறைந்தபட்சம் மாதத்திற்கு இரண்டு முறையாவது உள்ளூரிலேயே தியேட்டரோ, கடற்கரையோ, பூங்காவோ எங்கேயாவது இருவருக்கும் மனதிற்கு நெருங்கிய இடங்களுக்கு சென்று தனியாக நேரம் செலவிடுங்கள். 

இந்த பழக்கம் உங்கள் திருமண வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே செய்துவரும் போது, இல்லற வாழ்வில் பலமான அஸ்திவாரம் கிடைக்கும். நீங்கள் தனியாக நேரம் செலவழிக்கும்போது உங்களை குறித்து பார்ட்னருக்கும், பார்ட்னர் குறித்து உங்களுக்கும் புரிதல் கிடைக்கும். புரிதல் அதிகமாவதால் நெருக்கமும் அதிகமாகும். நெருக்கம் அதிகமானால் வாழ்வில் சந்தோஷம் பெருகும். அதாவது ஆரோக்கியமாக உறவை நீடித்து வந்தால் வாழ்வில் வரும் கஷ்டங்கள் கூட உங்களை பெரியளவில் பாதிக்காது. சிறுதுளி பெருவெள்ளம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு சிறு சிறு நினைவுகளை நீங்கள் தனியாக நேரம் செலவிடுவதன் மூலமும், சுற்றுலா செல்வதன் மூலமும் சேமித்து வந்தால் உங்கள் வாழ்வில் நீடித்த சந்தோஷத்தை வழங்கும் எனலாம். 

இருந்தாலும், தம்பதிகள் விடுமுறையை கொண்டாடவோ அல்லது தனியாக நேரம் செலவிடவோ சுற்றுலா செல்கிறீர்கள் என்றால் இந்த 5 தவறுகளை மட்டும் முடிந்தளவிற்கு தவிர்த்துவிடுங்கள். தனியாக நேரம் செலவிடுவதால் வரும் நன்மைகள் எவ்வளவோ, அதேபோன்று தனியாக நேரம் செலவிடும்போது இந்த 5 தவறுகளை செய்வதால் வரும் பாதிப்புகளும் அதிகம் எனலாம். எனவே, இந்த 5 தவறுகளை நினைவில் வைத்துக்கொண்டு அவற்றை தவிர்க்க முயற்சியுங்கள். அவை குறித்து இங்கு விரிவாக காணலாம். 

மேலும் படிக்க | இந்திய பெண்களுக்கு கொரிய ஆண்களை பிடிப்பது ஏன்? காரணம் ‘இது’தான்..!

1. அதிகம் எதிர்பார்க்காதீர்கள் 

சுற்றுலா என்றாலே அதிக எதிர்பார்ப்புடன் செல்லாதீர்கள். அனைத்து பிளான்களும் கச்சிதமாக நடக்கும் என்றில்லை. சிற்சில தடங்கல் வரலாம். எனவே, அதிக எதிர்பார்ப்புடன் சென்றால் ஏமாற்றம் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. உங்களின் ஏமாற்றம் உங்கள் பார்ட்னரையும் தாக்கலாம், இதனால் இருவருக்கும் மனஸ்தாபம் கூட ஏற்படலாம். எனவே, அனைத்தும் அனுசரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக நேரம் செலவிடுங்கள். சிற்சில பிரச்னைகளை ஊதித்தள்ளுங்கள். 

2. காசு விஷயத்தில் சண்டை வேண்டாம்

இருவரும் வெளியே செல்ல திட்டமிடும்போதோ அல்லது வெளியில் இருக்கும்போதோ பணம் குறித்து சண்டையிடவே கூடாது. பட்ஜெட்டை தீர்மானிப்பது முக்கியம் என்றாலும் நீங்கள் பொதுவெளியில் சென்று பட்ஜெட் குறித்த அழுத்தத்தில் பார்ட்னருடன் சண்டையிட்டால் அது சுற்றுலாவின் மகிழ்ச்சியையே கெடுத்துவிடக்கூடும். 

3. உங்கள் பிடித்ததை மட்டும் செய்யாதீர்கள்

எங்கு சுற்றுலா செல்லலாம், சுற்றுலாவில் என்ன செய்யலாம், எங்கு சாப்பிடலாம் முதற்கொண்டு அனைத்தையும் உங்கள் இஷ்டத்திற்கும், விருப்பத்திற்கும் செய்யவே செய்யாதீர்கள். உங்கள் பார்ட்னர் அவரின் விருப்பத்தை தெரிவிக்க தயங்கினாலும் நீங்கள் அவரின் விருப்பத்தை கேட்டே ஆக வேண்டும். இருவரும் மகிழ்ந்து அந்த சுற்றுலாவை கொண்டாட வேண்டும் என்றால் இருவரும் பரஸ்பரம் சேர்ந்து ஒவ்வொரு விஷயத்திலும் முடிவெடுங்கள். 

4. நேரம் முக்கியம்

சுற்றுலாவின் போது முடிந்தளவிற்கு அனைத்து பிளான்களையும் நேரத்திற்கு செய்ய தீர்மானியுங்கள். சுற்றுலாவில் நீங்கள் நேரத்தை கடைபிடிக்காவிட்டால் ஒட்டுமொத்த அனுபவம் கெட்டுவிடும் எனலாம். எனவே இருவரும் சேர்ந்து நேரத்தை தீவிரமாக கடைபிடியுங்கள். 

5. மற்றவையில் கவனம் செலுத்தாதீர்கள்

சுற்றுலா வந்த இடத்தில் உங்கள் பார்ட்னருடன் மட்டும் நேரத்தை செலவிடுங்கள். வெளியே வந்திருக்கும் நேரத்தில் லேப்டாப்பில் வேலை பார்ப்பது, மொபைலில் சமூக வலைதளங்களை பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். இது சுற்றுலாவில் சிக்கலை ஏற்படுத்தலாம். 

மேலும் படிக்க | அலைபாயும் மனதை அமைதிப்படுத்த வேண்டுமா? தினமும் ‘இந்த’ சிம்பிள் விஷயங்களை பண்ணுங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News