தற்போது உலகில் பிரபலமாகவும், பலரது எதிர்பார்ப்பில் இருப்பது 5ஜி, இதுவரை 4ஜி பயன்படுத்திய அனைவரும் 5ஜி இணைப்பை பெறுவதில் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டனர். உலகம் முழுவதும் தற்போது 5ஜி அலை வேகமாக பரவி வருகிறது, பல ஸ்மார்ட்போன்களை 5ஜி இணைப்புடன் வர தொடங்கிவிட்டன.
இந்நிலையில் பலரும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் 4ஜி சிம் வேலை செய்யுமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கும். பெரும்பாலானவர்கள் தங்களது மொபைல் நம்பரை அடிக்கடி மாற்றுவதை விரும்பமாட்டார்கள், ஏனெனில் ஏற்கனவே வைத்திருக்கும் நம்பரை பல முக்கியமான கணக்குகளுக்கு கொடுத்திருப்பார்கள் அப்படி இருக்கையில் நம்பரை மாற்றுவது கடினமானதாக இருக்கும்.
மேலும் படிக்க | 5G Smartphones: ரூ.20,000-க்குள் இருக்கும் பெஸ்ட் 5G ஸ்மார்போன்கள் லிஸ்ட்
நீங்கள் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் அதற்கு 5ஜி சிம் கார்டை தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை, உங்கள் 5ஜி மொபைலில் பழைய 4ஜி சிம் கார்டையே பயன்படுத்தி கொள்ளலாம். உங்கள் சிம் கார்டு 4ஜி/எல்டிஇ நெட்வொர்க்குகளுடன் சிறப்பாக செயல்பட்டால் அது கண்டிப்பாக உங்கள் 5ஜி ஸ்மார்ட்போனில் சிறப்பாக வேலை செய்யும். ஏற்கனவே ஏர்டெல் தொலைத்தொடர்பு ஆபரேட்டர் 4ஜி சிம் மூலம், 5ஜி நெட்வொர்க்கிற்கான அணுகலைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளது. 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜி சிம் கார்டு தாராளமாக பயன்படுத்தலாம், அதேசமயம் 5ஜி நெட்வொர்க்கின் அனைத்து வசதிகளையும் பெற விரும்பினால் 5ஜி சிம் கார்டு இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஏர்டெல் வாடிக்கையளர்களாக இருப்பவர்கள் இதுகுறித்து கவலைப்பட வேண்டிய தேவையில்லை, அவர்களது 4ஜி சிம்மை 5ஜி க்கு மாற்றாமலேயே, 5ஜி நெட்வொர்க்கிங் அனைத்து விதமான அம்சங்களையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஏர்டெல் நிறுவனம் உறுதியளித்துள்ளது. பார்தி ஏர்டெல் 5ஜி ஒரு நான்-ஸ்டாண்டலோன் 5ஜி (என்எஸ்ஏ) உள்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. கூடுதல் செலவின்றி 4ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஏர்டெல்லை இது அனுமதிக்கிறது.
மேலும் படிக்க | 5ஜி நெட்வொர்க்கை ஈஸியாக பெறலாம்; புது சிம்கார்டு வாங்க வேண்டுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ