செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் நபர் பெண்ணாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வீராங்கனைகள் மட்டும் விண்வெளியில் நடக்கும் நிகழ்வுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா ஏற்பாடு செய்துள்ளது. சமீபத்தில் நாசா அதிகாரியான ஜிம் பிரிடென்ஸ்டைன், வானொலி உரையாடல் நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர்,
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் முதல் நபர் ஒரு பெண்ணாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும், நாசாவின் எதிர்கால செயல்திட்டங்களில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று அவர் கூறினார்.