Flipkart அதிரடி சலுகை: வெறும் ரூ. 9499-க்கு அட்டகாசமான 40 இஞ்ச் ஸ்மார்ட் டிவி

ஆண்டின் இறுதியில், ஸ்மார்ட் டிவிகளில் அற்புதமான சலுகைகள் கிடைக்கின்றன. 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவி-ஐ வாங்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 2, 2021, 11:19 AM IST
  • பிளிப்கார்டில் டிவி டேய்ஸ் விற்பனை நடந்து வருகிறது.
  • இந்த சேலில் ஸ்மார்ட் டிவி மிகவும் மலிவாக கிடைக்கிறது.
  • வங்கி ஆஃபர்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மூலம் நீங்கள் டிவியை மிக மலிவான விலையில் வாங்கலாம்.
Flipkart அதிரடி சலுகை: வெறும் ரூ. 9499-க்கு அட்டகாசமான 40 இஞ்ச் ஸ்மார்ட் டிவி

Flipkart TV Days Sale: பிளிப்கார்டில் டிவி டேய்ஸ் விற்பனை நடந்து வருகிறது. இந்த சேல் டிசம்பர் 1 முதல் 3 வரை நடக்கும். இந்த சேலில் ஸ்மார்ட் டிவி மிகவும் மலிவாக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அட்டகாசமான சேலில், Mi, OnePlus, Realme, Samsung மற்றும் Motorola ஆகியவற்றின் ஸ்மார்ட் டிவிகளில் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன. பழைய டிவியை மாற்றிவிட்டு புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், இதுவே சரியான வாய்ப்பு.

ஆண்டின் இறுதியில், ஸ்மார்ட் டிவிகளில் (Smart TV)  அற்புதமான சலுகைகள் கிடைக்கின்றன. இந்த சேலில் மோட்டோரோலாவின் 40 இன்ச் ஸ்மார்ட் டிவியை மிக மலிவாக வாங்கலாம். 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவி-ஐ வாங்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வளவு குறைந்த விலையில் இதை எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம்.

MOTOROLA ZX2 40 இன்ச் முழு HD LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

MOTOROLA ZX2 40 இன்ச் முழு HD LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி-யின் அறிமுக விலை ரூ.39,999 ஆகும். ஆனால் பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில், இந்த டிவியில் 45% தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது ரூ.21,999-க்கு, இந்த விற்பனையில் இந்த டிவி-ஐ வாங்க முடியும்.

எனினும், வங்கி ஆஃபர்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மூலம் நீங்கள் டிவியை இன்னும் மலிவாக வாங்கவும் வாய்ப்புள்ளது. அவற்றைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ:Flipkart Big Bachat Dhamaal Sale: டிசம்பர் 4 துவங்குகிறது அசத்தல் சேல், ஏகப்பட்ட சலுகைகள் 

MOTOROLA ZX2 40 இன்ச் முழு HD LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: வங்கி சலுகைகள்

சிட்டி பேங்கின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் இந்த ஸ்மார்ட் டிவி வாங்க பணம் செலுத்தினால், ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். அதாவது ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.20,499 ஆக குறையும். இதற்குப் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டால், இன்னும் மலிவான விலையில், வாடிக்கையாளர்கள் இந்த டிவி-ஐ வாங்கலாம்.

MOTOROLA ZX2 40 இன்ச் முழு HD LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

MOTOROLA ZX2 40 Inch Full HD LED Smart Android TV-யில்  ரூ.11 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியைப் பெறலாம்.

எனினும், பரிமாற்ற சலுகையைப் பெற, உங்கள் பழைய டிவியின் நிலை நன்றாகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். பரிமாற்ற சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்.

இந்த விற்பனையில் கிடைக்கும் அனைத்து தள்ளுபடிகளையும் பெற முடிந்தால், வாடிக்கையாளர்கள் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி-ஐ வெறும் ரூ.9,499-க்கு வாங்கலாம்.

ALSO READ:Amazon Sale: ரூ. 349க்கு சூப்பர் Smartphone, முழு விவர்ம் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News