மயங்க வைக்கும் Flipkart சலுகை: வெறும் ரூ. 15-க்கு அட்டகாசமான Oppo A12 கிடைக்கும்

நம்ப முடியாத அளவில் இருக்கும் இந்த சலுகையில் Oppo A12 ஸ்மார்ட்போனை வெறும் 15 ரூபாய்க்கு வாங்கலாம். இவ்வளவு குறைந்த விலையில் இந்த லேட்டஸ்ட் போனை எப்படி வாங்குவது என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.  

Written by - ZEE Bureau | Last Updated : Dec 4, 2021, 11:46 PM IST
  • பிளிப்கார்ட் அவ்வப்போது தனது பயனர்களுக்கு அதிரடியான பல சலுகைகளை வழங்கி வருகிறது.
  • இந்த சலுகையில் Oppo A12 ஸ்மார்ட்போனை வெறும் 15 ரூபாய்க்கு வாங்கலாம்.
  • இந்த டீலில் வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்குகிறது.
மயங்க வைக்கும் Flipkart சலுகை: வெறும் ரூ. 15-க்கு அட்டகாசமான Oppo A12 கிடைக்கும்

Flipkart Offer: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் அவ்வப்போது தனது பயனர்களுக்கு அதிரடியான பல சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது, ​​ஃப்ளிப்கார்ட்டில் ஒரு ஆஃபர் லைவாக உள்ளது. இந்த சலுகையின் விவரங்களைப் பற்றி தெரிந்தால் சிலருக்கு மயக்கமே வந்துவிடலாம்.

நம்ப முடியாத அளவில் இருக்கும் இந்த சலுகையில் Oppo A12 ஸ்மார்ட்போனை வெறும் 15 ரூபாய்க்கு வாங்கலாம். இவ்வளவு குறைந்த விலையில் இந்த லேட்டஸ்ட் போனை எப்படி வாங்குவது என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Oppo A12 ஐ ரூ.15-க்கு வாங்கலாம்

Oppo இன் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை சந்தையில் ரூ.11,990 ஆக உள்ளது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் மூலம் 4% தள்ளுபடியில் இந்த போனை ரூ.11,490-க்கு வாங்கலாம்.

இதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனை வாங்க ஃப்ளிப்கார்ட் (Flipkart) ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 5% அதாவது ரூ.575 கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் இந்த போனின் விலை ரூ.10,915 ஆக குறையும்.

ALSO READ:Flipkart அதிரடி சலுகை: வெறும் ரூ. 9499-க்கு அட்டகாசமான 40 இஞ்ச் ஸ்மார்ட் டிவி 

படு மாஸான எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

இந்த டீலில் வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த ஒப்போ ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.10,900 வரை சேமிக்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் முழுமையாக பெற முடிந்தால், இந்த அட்டகாசமான ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனை, அதன் உண்மையான விலையான ரூ.10,915க்குப் பதிலாக  வெறும் ரூ.15-க்கு வாங்க முடியும்.

Oppo A12: அம்சங்கள்

ஒப்போவின் (Oppo) இந்த 4ஜி ஸ்மார்ட்போன் 3டி டைமண்ட் பிளேஸ் வடிவமைப்புடன் வருகிறது. டிஸ்ப்ளே பற்றி பேசுகையில், இந்த மிக மெல்லிய மற்றும் இலகுவான போனில் 6.22 இன்ச் HD + TFT LCD டிஸ்ப்ளே கிடைக்கும். MediaTek Helio P35 சிப்செட்டில் வேலை செய்யும் இந்த ஃபோன் 4GB RAM மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. மேலும் இந்த போனில் 4,230mAh பேட்டரி கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் (Smartphone), இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் பிரதான சென்சார் 13MP மற்றும் இரண்டாவது சென்சார் 2MP கொண்டுள்ளது. இதில் செல்ஃபி எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் 5எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. இது ஒரு இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன் ஒரு வருட பிராண்ட் வாரண்டியுடன் வருகிறது.

ALSO READ:Flipkart Big Bachat Dhamaal Sale: டிசம்பர் 4 துவங்குகிறது அசத்தல் சேல், ஏகப்பட்ட சலுகைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News