Flipkart Big Billion Days Sale 2023: சாம்சங் முதல் ஓப்போ வரை... பம்பர் தள்ளுபடியில் டாப் 3 ஸ்மார்ட்போன்கள்

Flipkart Sale Offer: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை கோலாகலகமாக தொடங்கியுள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் எல்லாம் எந்தெந்த பொருளுக்கு இருக்கிறது என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 8, 2023, 09:21 AM IST
  • பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை
  • கோலாகலமாக ஆன்லைனில் தொடங்கியது
  • இப்போதைய டீலில் டாப் 3 ஸ்மார்ட்போன்கள்
Flipkart Big Billion Days Sale 2023: சாம்சங் முதல் ஓப்போ வரை... பம்பர் தள்ளுபடியில் டாப் 3 ஸ்மார்ட்போன்கள்  title=

பிக் பில்லியன் டேஸ் விற்பனை 2023 அதிகாரப்பூர்வ தேதிகள் ஒரு வாரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இப்போது இந்தியாவில் அக்டோபர் 8 முதல், அதாவது இன்று முதல் பண்டிகைகால ஆன்லைன் விற்பனை தொடங்கியுள்ளது. இது அக்டோபர் 15, 2023 அன்று முடிவடையும். இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள், இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல புதிதாக தயாரிப்புகள் பெரும் தள்ளுபடியுடன் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

ஃப்ளிப்கார்ட், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் வங்கி போன்றவற்றுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதன் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளின் மூலம் வாங்கும் போது உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. இந்த விற்பனைக்காக நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தால், Samsung Galaxy F13, Motorola G32, Oppo A17K, Realme C55 போன்ற அதிகம் கவனம் பெற்ற ஸ்மார்ட்போன்கள் இப்போது தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதைப் பற்றிய விவரத்தை இப்போது தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | இந்தியாவின் சிறந்த 7 சீட்டர் கார்... 26 கி.மீ., மைலேஜ் கிடைக்கும் - அட்டகாசமான விலை விவரம் இதோ!

Samsung Galaxy F13: 

Flipkart Sale 2023-ல் ​​9199 ரூபாய்க்கு ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த சலுகை 38 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் 5 உடன் 6.6-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. Exynos 850 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 8GB RAM மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் கேமரா அமைப்பில் 50 MP பிரதான கேமரா உள்ளது. இது 8 MP முன் கேமராவுடன் வருகிறது. இதில் 6000 mAh லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஜி32: 

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், இந்த ஸ்மார்ட்போனை ரூ.9999-க்கு வாங்கலாம். இதன் உண்மையான விலை ரூ.18999. ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளேவை 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. 50MP பிரதான கேமரா மற்றும் 16MP முன் கேமராவை உள்ளடக்கிய மூன்று-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 680 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 5000 mAh லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 33 W TurboPower சார்ஜரை ஆதரிக்கிறது.

Oppo A17k: 

நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வெறும் 8,999 ரூபாய்க்கு வாங்கலாம். உண்மையில் அதன் அசல் விலையில் 30 சதவீதம் தள்ளுபடி உள்ளது. இதன் விலை ரூ.12,999. இந்த சாதனம் 6.56-இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் MediaTek Helio P35 செயலி மூலம் இயக்கப்படுகிறது என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இதில் 8MP AI பிரதான கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமரா செல்ஃபிக்களுக்கானது.ஸ்மார்ட்ஃபோன் 5000 mAh பேட்டரியுடன் வருகிறது. கூடுதல் சேமிப்பிற்காக RAM விரிவாக்க தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | செம அமேசான் ஆப்பர்... ரூ.6000 இயர்பாட் இப்போது ரூ.1000 தான் - முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News