ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த வரவான iPhone 12, சிறிய - எளிதில் கையாளக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்குச் செல்வது குறித்து பரிசீலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 2020-ஆம் ஆண்டு iPhone 12, iPhone 12 Pro மற்றும் iPhone 12 Pro Max ஆகியவை வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆப்பில் iPhone 12 தொடரானது iPhone 4 அல்லது iPhone 5 வடிவங்களை ஒத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது iPhone 12 தொடர் ஸ்மார்ட்போனின் திரை காட்சி 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 5.8 அங்குலத்திலிருந்து 5.4 அங்குலமாகக் குறைக்கப்படும் என கூறப்படுகிறது.
iPhone 12 தொடர் ஆனது, பின்புறத்தில் நான்கு கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 5G இணைப்பு ஆதரவு, 6GB ROM கொண்டு விளையாட்டு அம்சத்தை ஊக்குவிக்கும் எனவும் தெரிகிறது.
கூடுதலாக, iPhone சிறந்த புகைப்பட மற்றும் பெரிதாக்கப்பட்ட ரியாலிட்டி திறன்களுக்காக பின்புறமாக எதிர்கொள்ளும் 3D சென்சிங் கேமராக்களை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் iPhone தயாரிப்பதற்கு முன் அடுத்த iPad Pro-வில் அறிமுகமாகும் என்று முந்தைய அறிக்கை கணித்தது. ஆனால் தற்போது iPhone 12 தொடரிலேயே வெளியாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
iPhone 11-ல் பயன்படுத்தப் பட்டது போன்று, iPhone 12-லும் 3GB RAM உடன் கூடிய A13 சிப் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் மூன்று வண்ண (வெள்ளி, விண்வெளி சாம்பல் மற்றும் சிவப்பு) விருப்பங்களில் இந்த iPhone வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இதன் விலை $399 (இந்திய மதிப்பில் 29,000 ரூபாய்) முதல் துவங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பார்க்லேஸ் ஆய்வாளர் பிளேனே கர்டிஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் அறிக்கையின் படி ஆப்பிளின் iPhone 12 Pro மற்றும் iPhone 12 Pro Max ஆகியவை செப்டம்பர் 2020-ல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என கூறப்படுகிறது.
(IANS உள்ளீடுகளுடன்)