அறிமுகம் ஆனது Samsung Galaxy F54: விலை, பிற விவரங்கள் இதோ

Samsung Galaxy F54: பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், சாம்சங் கேலக்சி எஃப்54 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 6, 2023, 08:54 PM IST
  • இந்தியாவில் Samsung Galaxy F54 5G இன் விலை ரூ.27,999 ஆகும்.
  • இது ஆரம்ப வெளியீட்டு விலை.
  • இதன் சில்லறை விலை வியாபார விரைவில் தெரியவரும்.
அறிமுகம் ஆனது Samsung Galaxy F54: விலை, பிற விவரங்கள் இதோ title=

Samsung Galaxy F54 5G இந்தியாவில் அறிமுகம் ஆனது: பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், சாம்சங் கேலக்சி எஃப்54 (Samsung Galaxy F54) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு ஆல்-ரவுண்டர் ஃபோன் ஆகும். இதில் வாடிக்கையாளர்கள் சிறந்த கேமரா, வலுவான பேட்டரி மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைப் பெறுவார்கள். இது தவிர, தொலைபேசியில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, மிட்-ரேஞ்ச் எக்ஸினோஸ் சிப், வேகமாக சார்ஜ் செய்வதற்கான ஆதரவு ஆகியவையும் கிடைக்கும். Samsung Galaxy F54 5G இன் விலை மற்றும் அம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Samsung Galaxy F54 5G: இந்தியாவில் இதன் விலை என்ன?

இந்தியாவில் Samsung Galaxy F54 5G இன் விலை ரூ.27,999 ஆகும். இது ஆரம்ப வெளியீட்டு விலை. இதன் சில்லறை விலை வியாபார விரைவில் தெரியவரும். இன்று முதல் இந்த போன் முன்பதிவுக்கு கிடைக்கும். இந்த போனின் விற்பனை விரைவில் ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் தொடங்கும். இது தவிர, சில்லறை விற்பனைக் கடைகளிலும் இந்த ஸ்மார்ய்போன் கிடைக்கும்.

Samsung Galaxy F54: விவரக்குறிப்புகள்

Samsung Galaxy F54 ஸ்மார்ட்போன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.7-இன்ச் டிஸ்ப்ளேவைப் பெறுகிறது. ஃபோனில் அமோல்ட் பேனல் உள்ளது. இது HD+ தெளிவுத்திறனில் இயங்குகிறது. திரைப் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பூச்சு இதில் உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின் பக்க வடிவமைப்பு கேலக்சி எஸ் 23 போலவே தெரிகிறது. இதனால் இந்த போனுக்கு ஃப்ளாக்ஷிப் உணர்வு கிடைக்கின்றது. 

மேலும் படிக்க | KFON வெளியிட்ட அதிரடி மலிவு விலை திட்டம்: 6 மாதங்களுக்கு 3,000 ஜிபி.. மாதம் ரூ.299

இந்த ஸ்மார்ட்போன் Exynos 1380 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஃபோன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 OS இல் இயங்குகிறது. நிறுவனம் 4 வருட ஆண்ட்ராய்டு OS அப்கிரேட் மற்றும் 5 வருட பாதுகாப்பு பேட்ச்களை போனுடன் வழங்குகிறது.

Samsung Galaxy F54: கேமரா விவரங்கள்

Samsung Galaxy F54 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பயனர்களுக்கு மூன்று கேமரா அமைப்பு கிடைக்கின்றது. இந்த தொலைபேசியில் OIS ஆதரவுடன் 108MP முதன்மை சென்சார் உள்ளது. அதனுடன் 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. இது தவிர, முன்பக்கத்தில் 32எம்பி செல்ஃபி சென்சார் உள்ளது.

Samsung Galaxy F54: பேட்டரி விவரங்கள்

Samsung Galaxy F54 ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த கைபேசியுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை. நிறுவனம் தொலைபேசியுடன் ஒரு கேஸைக் கூட வழங்கவில்லை. கேலக்ஸி ஏ54 ஸ்மார்ட்போனில் காணப்படும் இன்-டிஸ்ப்ளே சென்சாருக்கு பதிலாக புதிய சாம்சங் போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. கேலக்சி எஃப் 54 கீழ் பக்கத்தில் ஒரு ஸ்பீக்கரைக் கொண்டுள்ளது.

கூடுதல் தகவல்:

பிரபல ஸ்மாட்போன் நிறுவனமான சாம்சங்கின்  Samsung Galaxy S22 5G இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் ஆகும். பல நாட்களாக இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் டாப் தேர்வாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் இன்னும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க ஆசைப்படுகிறார்கள். இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த இன் கிளாஸ் அம்சங்களே இதற்கு முக்கிய காரணமாகும். 

இதன் அற்புதமான வடிவமைப்பும் அம்சங்களும் சாம்சங் காலக்சி எஸ்22 5ஜி போனை அதன் வரம்பில் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் வைத்திருக்கிறது. இப்போது Galaxy S23 சீரிஸும் சந்தையில் வந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், கேலக்ஸி எஸ்22 விலையில் பெரும் குறைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஒரு மிக நல்ல கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் அதன் டிஸ்ப்ளே மற்றும் அதன் கேமராவும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக உள்ளன. 

மேலும் படிக்க | Jio offers: ஜியோவின் அதிரடி சிறப்பு ஆபர்! வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News