இந்தியாவில் Pixel 4 வெளியாகாத காரணம் என்ன? கூகிள் தரும் விளக்கம்!

கூகிள் இந்த ஆண்டு தனது புதிய Pixel 4 மற்றும் Pixel 4 XL ஸ்மார்ட்போன்களுக்காக இந்தியாவைத் தவிர்த்துள்ளது!

Last Updated : Oct 16, 2019, 06:28 AM IST
இந்தியாவில் Pixel 4 வெளியாகாத காரணம் என்ன? கூகிள் தரும் விளக்கம்! title=

கூகிள் இந்த ஆண்டு தனது புதிய Pixel 4 மற்றும் Pixel 4 XL ஸ்மார்ட்போன்களுக்காக இந்தியாவைத் தவிர்த்துள்ளது!

இந்த இரண்டு தொலைபேசிகளும் நியூயார்க் நகரில் நடந்த ஒரு நிகழ்வில் வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு வரை, கூகிள் தனது Pixel தொலைபேசிகளை அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் மட்டும் Pixel ஸ்மார்ட்போன்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கூகிள் செய்திதொடர்பாளர் தெரிவிக்கையில்., “கூகிள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பிராந்தியங்களில் கிடைக்கக்கூடிய பலவிதமான தயாரிப்புகளைக் கொண்டுள்ளது. உள்ளூர் போக்குகள் மற்றும் தயாரிப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சந்தைக்கு செல்லும் தயாரிப்புகளை தீர்மானிக்கிறோம். அந்த வகையிலேயே Pixel 4-ஐ இந்தியாவில் கிடைக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். எங்கள் தற்போதைய Pixel தொலைபேசிகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், எதிர்கால Pixel சாதனங்களை இந்தியாவுக்குக் கொண்டுவர எதிர்பார்க்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

TechCrunch அறிக்கையின்படி, கூகிள் Pixel 4-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான முக்கிய தடையாக சோலி ரேடார் அடிப்படையிலான மோஷன் சென்சிங் அம்சம் இருந்தது. இந்த அம்சம் செயல்பட 60GHz mmWave அதிர்வெண்ணைப் பயன்படுத்துகிறது. இந்தியாவில் அதிர்வெண் பெறுவதற்கான உரிமத்தை கூகிள் பெற தவறிவிட்டதாக அறிக்கை கூறுகிறது.

ஜப்பான் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மோஷன் சென்சிங் அம்சம் இல்லாமல் Pixel 4 மற்றும் Pixel 4 XL ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Pixel 4 நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஆனது கூகிளின் முதல் ரேடார் அடிப்படையிலான மோஷன் சென்சிங் சிப் கொண்ட ஸ்மார்போன் ஆகும். இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அலாரம் உறக்கநிலையில் வைப்பது அல்லது தடங்களை மாற்றுவது போன்ற சில பணிகளை பயனர்கள் தங்கள் கைகளை அசைப்பதன் மூலம் செய்ய இந்த அம்சம் அனுமதிக்கிறது.

“Pixel 4 ஆனது Soli-யுடன் கூடிய முதல் சாதனமாக இருக்கும், இது எங்கள் புதிய மோஷன் சென்ஸ் அம்சங்களை இயக்கும், இது உங்கள் கையை அசைப்பதன் மூலம் பாடல்களைத் தவிர்க்கவும், அலாரங்களை உறக்கநிலையில் வைக்கவும், தொலைபேசி அழைப்புகளை அமைதிப்படுத்தவும் அனுமதிக்கும். இந்த திறன்கள் ஒரு தொடக்கமாகும், மேலும் காலப்போக்கில் Pixel மேம்படுவதைப் போலவே, மோஷன் சென்ஸும் உருவாகும்.” என்று கூகிள் ஒரு வலைப்பதிவு இடுகையில் விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News