Happy Mattu Pongal Memes: இணையத்தில் வைரலாகும் மாட்டுப் பொங்கல் மீம்ஸ்

Happy Mattu Pongal 2023 Memes: இன்று காணும் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்காகவே இணையம் முழுவதும் பல மீம்களை உருவாக்கி கலாய்த்துவருகிறார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 16, 2023, 03:03 PM IST
  • சமூக வலைதலங்களில் வைரலாகும் மாட்டு பொங்கல்.
  • மாட்டு பொங்கல் மீம்ஸ்..
  • மாட்டு பொங்கல் காமெடி மீம்ஸ்.
Happy Mattu Pongal Memes: இணையத்தில் வைரலாகும் மாட்டுப் பொங்கல் மீம்ஸ் title=

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை மக்களின் வாழ்வில் ஒன்றிய காளைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். அதேபோல் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

மேலும் படிக்க | உழவர் திருநாளுக்கு உழவர் சந்தையை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்

இந்த நிலையில் இன்று மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னத்து மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இணையத்திலும் கொண்டாடும் விதமாக பல மீம் கிரியேட்டர்கள் பல மீம்களை உருவாக்கி வைராலக்கி வருகின்றனர். அதன் சில மீம்களை இந்த பதிவில் காணலாம்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

மேலும் படிக்க | தை பொறந்தாச்சு...களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்..! பொங்கல் வைக்கும் முறை இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News