Rs 199 Recharge Plans: இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல், வோடபோன் - ஐடியா, ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை அனைத்து வகை வாடிக்கையாளர்களுக்குமான ரீசார்ஜ் திட்டங்களை வாரி வழங்கி வருகின்றனர். குறிப்பாக, ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல், கூடுதல் டேட்டா வசதி போன்ற திட்டங்களும் இந்த ரீசார்ஜ் திட்டங்களில் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு அதிக தேவை உள்ளது. இந்தியாவில், மக்கள் இன்னும் மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஏனென்றால் அவர் ஒவ்வொரு மாதமும் தனது ரீசார்ஜ் ஆப்ஷன்களை பரிசீலனை செய்வார்கள். 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் உள்ள திட்டங்கள் மக்களின் முதல் தேர்வாக இருக்கும்.
நாட்டின் டாப் 4 டெலிகாம் நிறுவனங்கள் அதாவது ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை 199 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வருகின்றன. குறிப்பாக இரண்டாம் நிலை சிம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டங்கள் பயன்படும். எனவே, நீங்கள் எந்த சிம்மை வைத்திருந்தாலும், அதில் ரூ.199 ரீசார்ஜ் திட்டம் கொடுக்கும் பலன்கள் என்ன என்பதை இதில் காணலாம். இல்லையென்றால், இதில் உங்களுக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்து உங்கள் இரண்டாம் நிலை சிம்மாக அதை வைத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | ஜியோ, ஏர்டெல்லின் அன்லிமிட்டெட் டேட்டா பிளான்கள்..! பெஸ்ட் எது?
ஏர்டெல் ரூ. 199 திட்டம்
ஏர்டெல் நிறுவனம் 199 ரூபாயில் வைத்திருக்கும் இந்த ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் வரை வேலிடிட்டி கொண்டது. இந்தத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் மொத்தமாகவே 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் மொத்தம் 300 எஸ்எம்எஸ்களைப் பெறுகிறார்கள். கூடுதலாக, இந்த திட்டத்தில் HelloTunes மற்றும் Wynk Music ஆகியவற்றின் இலவச அணுகலையும் பெறுவார்கள். ஏர்டெல் இந்த திட்டத்தில் ரூ.5 டாக் டைமையும் வழங்குகிறது.
ஜியோ ரூ 199 திட்டம்
ஜியோவின் 199 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் 23 நாட்கள் வரை வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார். இது மொத்தமாக 34.5 ஜிபி டேட்டா பயன்பாட்டை வழங்குகிறது. இதில் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற ஜியோ நிறுவனத்தின் இலவச அணுகல் ஆகியவை அடங்கும். ஒரு நாளுக்கான தரவு, அதாவது 1.5 ஜிபி நிறைவடைந்தபின், இணைய வேகம் 64 Kbps ஆக குறைகிறது, ஆனால் பயனர் தொடர்ந்து சேவைகளைப் பெறுவார். 5ஜி சேவை இலவசமாகும்.
பிஎஸ்என்எல் ரூ.199 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 199 ரூபாய் திட்டமானது 30 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இதில், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் மொத்த டேட்டாவின் எண்ணிக்கை 60ஜிபி ஆகும். ஒரு நாளுக்கான 2ஜிபி டேட்டா வரம்பு நிறைவடைந்தால், இணைய வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும். இதில், 5ஜி சேவை இல்லை, 4ஜி சேவை தற்போது தொடங்கி உள்ளது.
வோடபோன் ஐடியா ரூ 199 திட்டம்
வோடபோன் ஐடியாவின் 199 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் 18 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தினமும் 1ஜிபி அதிவேக டேட்டா உள்ளது. Vi Movies மற்றும் TV Basic ஆகியவற்றின் இலவச அணுகலும் உள்ளது. ஒரு நாளுக்கான 1 ஜிபி டேட்டா நிறைவடைந்தால், இணைய வேகம் 64 Kbps ஆக குறையும். இது தவிர, இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ