மிகவும் மலிவான விலையில் 5G ஐபோன், விலையே இவ்வளவு தானா

Amazon Monsoon Carnival விற்பனையின் கடைசி நாள் இன்று. அதன்படி இன்று Apple iPhone SE 3 மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 22, 2022, 07:47 AM IST
  • ஐபோன் எஸ்இ 3 சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
  • அமேசான் மான்சூன் கார்னிவல்
  • ஐபோன் எஸ்இ 3 வங்கி சலுகைகள்
மிகவும் மலிவான விலையில் 5G ஐபோன், விலையே இவ்வளவு தானா title=

அமேசானில் மான்சூன் கார்னிவல் விற்பனை நடந்து வருகிறது, இன்று விற்பனையின் கடைசி நாளாகும். விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் மீது பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், இன்றுதான் சரியான நேரம். நீங்கள் ஐபோன் ரசிகராக இருந்து, லேட்டஸ்ட் போனை வாங்க விரும்பினால், இன்று ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3-ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். ஐபோன் எஸ்இ 3 இன் இவ்வளவு குறைந்த விலை இதுவரை இருந்ததில்லை. ஐபோன் எஸ்இ 3க்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றி தெரிந்து கொள்வோம்...

அமேசான் மான்சூன் கார்னிவல்: ஐபோன் எஸ்இ 3 சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
ஆப்பிள் ஐபோன் எஸ்இ (64 ஜிபி) (3வது தலைமுறை) அறிமுக விலை ரூ.43,900 ஆகும். ஆனால் அமேசானில் ரூ.41,900க்கு கிடைக்கிறது. அதாவது, போனில் முழு 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன, இதன் காரணமாக போனின் விலை கணிசமாக குறையும்.

மேலும் படிக்க | குறைந்த விலையில் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு

அமேசான் மான்சூன் கார்னிவல்: ஐபோன் எஸ்இ 3 வங்கி சலுகைகள்
ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு அல்லது ஹெச்டிஎஃப்சி வங்கியின் டெபிட் கார்டை பயன்படுத்தி ஐபோன் எஸ்இ 3 வாங்கினால், உங்களுக்கு முழு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு போனின் விலை ரூ.40,900 ஆக இருக்கும். குறைந்த விலையில் போனை வாங்க விரும்பினால் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு.

அமேசான் மான்சூன் கார்னிவல்: ஐபோன் எஸ்இ 3 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
ஐபோன் எஸ்இ 3 இல் ரூ.11,350 எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், நீங்கள் இவ்வளவு தள்ளுபடி பெறலாம். ஆனால் போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.11,350 தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் முழுமையாகப் பெற முடிந்தால், போனின் விலை ரூ.29,550 ஆக ஆகும்.

ஐபோன் எஸ்இ 3 அம்சங்கள்
ஐபோன் எஸ்இ 3 5ஜி கேமராவைப் பொருத்தவரை பின்பக்கம் 12 மெகாபிக்சல் ஆட்டோ போக்கஸ் கேமராவும், செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 12 மெகாபிக்சல் கேமரா முன்பக்கத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3000mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் இந்த ஆப்பிள் போன் சக்தியூட்டப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | Amazon Monsoon Carnival Sale 2022: ஸ்மார்ட் டிவியை ஸ்மார்ட்டா வாங்க இதுவே சரியான தருணம் மக்களே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News