புதுடெல்லி: நாட்டின் மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கோமகி கடந்த ஆண்டு ஜூன் மாதம் XGT-X1 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் இந்த ஆண்டு அதன் விலையிலும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இப்போது லித்தியம் அயன் பேட்டரியுடன் இதன் விலை ரூ. 60,000 ஆகவும் ஜெல் பேட்டரியுடன் ரூ. 45,000 ஆகவும் உள்ளது.
Komaki XGT-X1 Electric Scooter: அம்சங்கள்
Komaki XGT-X1-ல் டெலஸ்கோபிக் ஷாக்கர்ஸ், ரிமோட் லாக், திருட்டு எதிர்ப்பு லாக் அமைப்பு, ஒத்திசைக்கப்பட்ட பிரேக்கிங் அமைப்பு போன்ற பல அம்சங்கள் உள்ளன. கோமகி அதன் லித்தியம் அயன் பேட்டரிக்கு 2+1 (1 வருட சேவை உத்தரவாதம்) ஆண்டு உத்தரவாதத்தையும், டெட்-ஆசிட் பேட்டரிக்கு ஒரு வருட உத்தரவாதத்தையும் வழங்குகிறது.
XGT-X1-ல் ஒரு பெரிய டிரங்க் பகுதி இருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. இதில் ஒரு ஸ்மார்ட் டாஷ்போர்டும் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரிமோட் டயக்னஸ்டிக்ஸிற்கான சென்சாரும் உள்ளது. இது ரிமோட் லாக் உடன் வருகிறது.
அசத்தலான ஸ்கூட்டரின் வரம்பு
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஈகோ முறையில் 100 கிமீ முதல் 120 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது. இது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அம்சமாக உள்ளது.
ALSO READ: Okaya Electric Scooter 'Freedum': ரூ. 69,999 அசத்தல் விலையில் அபார அம்சங்கள்
மின்சார ஸ்கூட்டரின் விற்பனை அதிகரிக்கும்
கோமகி மின்சாரப் பிரிவின் இயக்குனர் குஞ்சன் மல்ஹோத்ரா, “வரும் காலங்களில் இந்த மின்சார-ஸ்கூட்டர் அதிக வாடிக்கையாளர்களைப் பெறும். குறிப்பாக நாட்டில் எரிபொருள் விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், இது நிச்சயமாக நடக்கும்.” என்று கூறினார்.
நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர், “எப்போதும்போல, கோமகி மின்சார வாகனங்களை வகைப்படுத்தும் அற்புதமான அம்சங்களுடன் வடிவமைத்துள்ளோம். பலவித முக்கிய விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளோம். இதுதான் கோமகி மின்சார வாகனங்களின் சிறப்பம்சமாகும். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் விலை, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மின்சார வாகனங்களை நோக்கி செல்லத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நிறுவனம் நம்புகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
விலையில் இதற்கு ஈடே இல்லை
வழக்கமாக, ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை சுமார் ரூ. 85,000 ஆக இருக்கும். ஆனால் கோமகி XGT-X1 இன் புதிய விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால் வாங்குபவர்கள் ஆக்டிவாவின் (Activa) அதே விலைக்கு 2 கோமகி ஸ்கூட்டர்களைப் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: Komaki XGT X5: முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக Electric Scooter
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR