Backups: கூகுள் மற்றும் வாட்ஸ்அப் பேக்கப் மாற்றங்கள்

கூகுள் டிரைவ் நிரம்பிவிட்டால் என்ன செய்வது? கூகுள் மற்றும் வாட்ஸ்அப் புதிய பேக்கப் மாற்றங்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 1, 2022, 07:34 AM IST
  • வாட்ஸ்அப் பேக்கப்: புதிய மாற்றங்கள்
  • கூகுள் புதிய வரம்பை திட்டமிடுகிறது
  • மொபைல் பயனர்களுக்கு நல்ல செய்தி
Backups: கூகுள் மற்றும் வாட்ஸ்அப் பேக்கப் மாற்றங்கள்  title=

வாட்ஸ்அப் காப்புப் பிரதிகளுக்கான இலவச வரையறுக்கப்பட்ட திட்டத்தை விரைவில் கூகுள் வழங்கவிருக்கிறது. அது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிகிறது.

கூகுள் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரண்டும், தங்கள் பேக்கப்களில் மாற்றங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக WABeta இன்ஃபோ தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், வாட்ஸ்அப் காப்புப்பிரதிகளுக்கு இலவச வரையறுக்கப்பட்ட திட்டத்தை வழங்க திட்டமிட்டுள்ளது.

iCloud இல் காப்புப்பிரதிகளைச் சேமிப்பதற்கான வரம்பற்ற திட்டத்தை ஆப்பிள் வழங்காததால், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இது மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

"WhatsApp காப்புப்பிரதிகளுக்கு Google வரையறுக்கப்பட்ட திட்டத்தை வழங்கும்! WhatsApp காப்புப்பிரதிகள் உங்கள் Google இயக்கக சேமிப்பக ஒதுக்கீட்டில் மீண்டும் கணக்கிடப்படும், ஆனால் Google எதிர்காலத்தில் ஒரு இலவச வரையறுக்கப்பட்ட திட்டத்தை வழங்க திட்டமிட்டுள்ளது" என்று WABeta Info என்ற WhatsApp ஐ கண்காணிக்கும் வலைத்தளம் Twitterஇல் தெரிவித்துள்ளது.

கூகுள் டிரைவ் நிரம்பிவிட்டாலோ, அதன் அதிகபட்ச வரம்பை எட்டிவிட்டாலோ என்ன செய்வது என்ற பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், கூகுள் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரண்டும் பேக்கப் (“Google Drive backup changing”) மாற்றங்களை புதிதாக அறிமுகப்படுத்தவிருக்கின்றன. அது குறித்த தகவல்களை WABeta Info வெளியிட்டுள்ளது. .

"கடந்த ஆண்டு கூகுள் போட்டோக்களுக்கு வரம்பற்ற சேமிப்பிடத்தை வழங்குவதை கூகுள் நிறுத்தியது., வாட்ஸ்அப் காப்புப்பிரதிகளை இலவசமாகச் சேமிக்க கூகுள் ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டை வழங்கும், ஆனால் இது வரையறுக்கப்பட்ட திட்டமாக இருக்கும், மேலும் புதிய சேமிப்பகத் திட்டம் பற்றிய தகவல்கள் இப்போது தெரியவில்லை" என WABeta தகவல் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் பேக்கப்பை சேமிப்பதற்கான வரம்பற்ற திட்டத்தை நிறுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது.

ALSO READ | உங்கள் இதயங்களை வெல்லும் வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் அப்டேட்!

பேக்கப் தொடர்புடைய செய்திகளில், இந்த ஆண்டு பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய அம்சங்களை வெளியிட WhatsApp திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. 

பிரபல மெசேஜிங் அப்ளிகேஷனான வாட்ஸ்அப், இப்போது புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது, இது வாட்ஸ்அப்பில் உள்ள குழு நிர்வாகிகளையும், குழுவின் மற்ற உறுப்பினர்களும் செய்திகளை நீக்க அனுமதிக்கிறது.

சமீபத்தில், வாட்ஸ்அப் இணையம்/டெஸ்க்டாப் கிளையண்டிற்கு மற்றொரு பயனுள்ள அம்சத்தை வெளியிட்டது. அதன்படி, குரல் பதிவுகளை இடைநிறுத்தி மீண்டும் தொடங்கும் திறன் கிடைத்தது.

குரல் குறிப்பை இடைநிறுத்த அனுமதிக்கும் புதிய இடைநிறுத்த பொத்தான் உள்ளது. இதற்கு முந்தைய பதிப்பீல் ஸ்டாப் ஐகான் (stop icon) மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், குரல் குறிப்பை (voice note) அனுப்பும் முன் கேட்கலாம், நீங்கள் குரல் குறிப்பை நீக்கலாம் அல்லது பதிவை மீண்டும் தொடரலாம்.

ALSO READ | Instagram: இனி இன்ஸ்டாவில் இந்த விஷயங்கள் மங்கலாக இருக்கும்! காரணம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News