குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் வாட்ஸ்அப்பில் Last Seen கட் செய்வது எப்படி?

வாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட காண்டாக்ட்டுகளுக்கு மட்டும் லாஸ்ட் சீனை மறைக்கும் வசதியை பயன்படுத்திக்கொள்ளும் அம்சம் அறிமுகப்படுத்தப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 18, 2022, 03:56 PM IST
  • வாட்ஸ்அப் பல புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.
  • மெசேஜ்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யலாம்.
  • ஒரே நேரத்தில் 32 பேருக்கு கால் செய்து கொள்ளலாம்.
குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் வாட்ஸ்அப்பில் Last Seen கட் செய்வது எப்படி? title=

சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் அதன் வாடிக்கையாளர்களுக்கென அளவுக்கு அதிகமான அம்சங்களை வழங்கி வருகிறது. தற்போது மெசேஜ்க்கு எமோஜி மூலம் பதிலளிக்கும் வசதி, கம்யூனிட்டிஸ் போன்ற அம்சங்கங்களை அறிமுகம் செய்துள்ளது.  தற்போது வாபீட்டாஇன்ஃபோ வெளியிட்ட அறிவிப்புப்படி, வாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட காண்டாக்ட்டுகளுக்கு மட்டும் லாஸ்ட் சீனை மறைக்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இந்நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | மொபைல் சீக்கிரமே சூடாகுதா? தடுக்க சில வழிகள்!

வாட்ஸ் ஆப்பிள் ஸ்டேட்டஸை எப்படி குறிப்பிட்ட நபர்களை மட்டும் மறைத்துவிட்டு வைக்கிறோமோ அதேபோல இந்த அம்சத்தின் மூலம் இனிமேல் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் நமது லாஸ்ட் சீனை பார்க்க இயலாதவாறு செய்யமுடியும்.  இந்த ஆப்ஷன் பிரைவசி செட்டிங்சில் உள்ளது, இதிலுள்ள லாஸ்ட் சீன ஆப்ஷனை நாம் க்ளிக் செய்ததும் அதில் 'எவ்ரிஒன்', 'மை காண்டாக்ட்ஸ்', 'நோபடி' மற்றும்  'மை காண்டாக்ட்ஸ் எக்செப்ட் ' என்கிற ஆப்ஷன்கள் இருக்கும்.  இதில் இறுதி ஆப்ஷனை தேர்வு செய்து யாரெல்லாம் நம்முடைய லாஸ்ட் சீனை பார்க்கக்கூடாது என்று நினைக்கிறோமோ அவர்களை ஹைட் செய்து கொள்ளலாம்.

இதே போல வாட்ஸ் அப் நம்முடைய ப்ரொபைல் போட்டோ மற்றும் அபவுட் செக்ஷனை யாரெல்லாம் பார்க்கலாம், யாரெல்லாம் பார்க்கக்கூடாது என்பதையும் தேர்வு செய்துகொள்ளும் ஆப்ஷனை வழங்குவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கென  'மை காண்டாக்ட்ஸ் எக்செப்ட்' ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது, இதனை இயக்க நீங்கள் வாட்ஸ் அப் செட்டிங்ஸ் > அக்கவுண்ட் > பிரைவசி > லாஸ்ட் சீன / ப்ரொபைல் போட்டோ / அபவுட் என்றவாறு தேர்வு செய்யலாம்.  மேலும் வாட்ஸ் அப் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு சில வசதிகளை வழங்கியுள்ளது.  அதாவது 32 பேருடன் ஒரே நேரத்தில் வாய்ஸ் கால் செய்யும் வசதி, பெரியளவில் கம்யூனிட்டிகளை உருவாக்குவது, 2ஜிபி அளவுள்ள ஃபைல்களை அனுப்புவது, வாட்ஸ் அப் குழுவில் அட்மின்கள் மெசேஜ்களை டெலீட் செய்வது, மெசெஜ்க்கு எமோஜிகள்  மூலம் பதிலளிப்பது போன்ற பல அசத்தலான அம்சங்களை வழங்கியுள்ளது.

மேலும் படிக்க | மொபைல் பேட்டரிகள் வெடிப்பதற்கான காரணம் இதுதான் - இந்த தவறை செய்யாதீங்க

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News