தற்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டது, முன்பெல்லாம் கணினிகளை நாடியவர்கள் தற்போது ஸ்மார்ட்போன்களிலேயே அனைத்தையும் செய்ய தொடங்கிவிட்டனர். இதன் அதிக செயலதிறன் காரணமாக விரைவிலேயே ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் வெப்பமாவதை அனைவரும் உணர்ந்திருப்போம். மொபைல்கள் வெப்பமடைவது தீங்கிழைக்கும் ஒன்றாக கருதப்படுகிறது, இவ்வாறு மொபைல்கள் அதிகமாக சூடாவதால் மொபைலின் செயல்திறன் மந்தமாகிறது, டேட்டா குறைகிறது மற்றும் பேட்டரியின் திறனும் குறைகிறது. மொபைல் வெப்பமடைவது தொடர நேரிட்டால் உங்களது மொபைல் விரைவில் பழுதடைந்து விடும். அதிலும் தற்போது கோடைகாலம் என்பதால் மொபைல் அதிகளவில் வெப்பமடைய வாய்ப்பு உள்ளது, அதனால் சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மொபைலை அதிகப்படியான வெப்பத்திலிருந்து பாதுகாக்கலாம்.
மேலும் படிக்க | அறிமுகமானது Infinix Hot 11 குறைந்த விலையில் சூப்பர் அம்சங்கள்
கோடைகாலங்களில் கார்களில் மொபைலை தவிருங்கள், கார் ஜன்னலின் வழியே சூரிய ஒளிக்கதிர்கள் ஊடுருவி காரினுள் வெப்பம் மிகுதியாகி, அதனால் மொபைலும் வெப்பமடைகிறது. உங்கள் காரை நிழலான இடத்தில் நிப்பாட்டி வைத்திருந்தால் கூட அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் காரினுள் வெப்பம் மிகுந்துவிடும் என்று சில அறிக்கைகள் கூறுகிறது. நாம் பயன்படுத்தும் மொபைலை ஒரு குழந்தையாகவோ அல்லது செல்லபிராணியை போலவோ பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் காரில் ஏசி இல்லாதபோதோ அல்லது கார் இயக்கநிலையில் இல்லாதபோதோ அதனுள் மொபைல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
மனிதர்களால் எவ்வாறு சூரிய ஒளியில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாதோ அதேபோல மொபைலைகளாலும் அதிகப்படியான சூரிய ஒளியை தாங்க முடியாது. நேரடியாக சூரிய ஒளி படும் இடத்தில் மொபைலை சார்ஜ் செய்யவோ அல்லது வைக்கவோ கூடாது. சூரிய ஒளி மற்றும் சார்ஜ் செய்வதன் வெப்பம் மொபைலை அதிக வெப்பமடைய செய்கிறது. நீங்கள் மொபைலை இயக்காத நேரத்தில் ஸ்மார்ட்போனின் பின்னணியில் சில ஆப்ஸ்கள் இயங்கிக்கொண்டு இருக்கும். இவ்வாறு பின்னணியில் இயங்கும் சில ஆப்ஸ்களால் பேட்டரியின் திறனும் குறையும், அதோடு ஸ்மார்ட்போன் வெகு வேகமாக வெப்பமடைந்து விடும் அபாயம் உருவாகுகிறது. உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி செட்டிங்கிற்கு சென்று எந்த ஆப்ஸ்கள் அதிகளவு பேட்டரியை பயனப்டுத்துகிறது என்பதை கண்டறிந்து, அவற்றை நீக்கிவிட வேண்டும். ஸ்டோரேஜ் சற்று குறைவாக இருந்தால் மொபைலும் வேகமாக இயங்குவதோடு வெப்பமடையாமலும் இருக்கும்.
பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் பலவித டிசைன்களில் மொபைல் கேஸ்களை வெளியிடுகின்றன. ஆனால் இவை அனைத்தும் மொபைலின் வெப்பத்தை சமன்செய்யும் அளவிற்கு வடிவமைக்கப்படவில்லை, இருப்பினும் இது மொபைலை அதிக வெப்பமாகாமல் தடுப்பதாக கூறப்படுகிறது. மொபைல் கேஸ் இருந்தும் உங்கள் மொபைல் அதிகம் வெப்பமடைவதாக நீங்கள் உணர்ந்தால் உடனே அதன் கவரை கழட்டிவிட்டு மொபைலை வெளியே எடுத்து காற்றோட்டமாக வைத்துவிடுங்கள், அதன்பின்னர் வெப்பம் சிறிது சிறிதாக குறைந்துவிடும்.
மொபைல் வெப்பமாவதை தடுக்க அதனை குளிர்விக்கும் வகையில் ஒரு மின்விசிறியை பயன்படுத்தி கொள்ளலாம். நீண்ட நேரம் கேம் விளையாண்டாலோ அல்லது மொபைலை அதிக நேரம் பயன்படுத்தினால் மொபைல் வெப்பமாகும், அதனை தணிக்க மின்விசிறியை பயன்படுத்த வேண்டும். சில சாதனங்களில் கிளாம்பிங் வசதியுடன் குளிர்விக்கும் மின்விசிறிகள் பொருத்தப்படுகின்றன. மொபைல்களை குளிர்விக்க பயன்படுத்தப்படும் மின்விசிறிகள் பலவித மாடல்களில் கிடைக்கிறது.
மேலும் படிக்க | மொபைல் பேட்டரிகள் வெடிப்பதற்கான காரணம் இதுதான் - இந்த தவறை செய்யாதீங்க
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR